காவிரி, ஸ்டெர்லைட், மீத்தேன் - தென் கொரியாவில் ஓங்கி ஒலித்த தமிழர்கள் குரல்
தென் கொரியாவின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் சிறு சிறு குழுக்களாக சேர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வடக்கே சோல் முதல் தெற்கே புசான் வரை, சோல், சுஒன், தேஜான், தேகு, பூசான் , சுன்ச்சோன், கொஜே தீவு, சொஞ்சூ, சொனான் மற்றும் உல்சான் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
நிகழ்வில் பதாகைகள் ஏந்தியும், உறுதிமொழி ஏற்றும் தீர்மானங்களை வாசித்தும் தங்கள் ஆதரவை காட்டினர் தென் கொரியாவில் வசிக்கும் தமிழ் மக்கள்.
ஸ்டெர்லைட் தொடர்பான செய்திகளைப் படிக்க:
- தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம் உருவெடுத்தது ஏன்? #GroundReport
- ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? - 5 முக்கிய கேள்விகள்
- ஸ்டெர்லைட்: ''போராட்டத்தின் பின்னணியில் உள்நோக்கங்கள் உள்ளன'' #GroundReport
உறுதிமொழி
அந்த நிகழ்வில் அவர்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழி: "அறத்தின் வழி வந்த மூத்தோர் நாங்கள். அறிவு உலகின் விதைகள் நாங்கள் தீமையின் கொடுநாவை பொசுக்கும் வேங்கைகள் உயிர்கள் அனைத்திற்கும் தமிழர் காவல் ஞானியர் பேரொளியும் இயற்கையின் வலிமையும் உலகோர் நட்பும் எமக்கு அரணாய் அமையும்." என்பதாக இருந்தது.
பின்பு இந்த ஆர்ப்பாட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
தீர்மானங்கள்
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை பெருமதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் நாட்டின் உணவு உற்பத்தி நடைபெறும் மிகமுக்கிய இடமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை நடுவண் அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும்.
தமிழகத்தின் தேனியின் அருகே பொட்டியாபுரம் மலையைக் குடைந்து அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டம் குறித்து மக்களுக்கு எழுந்திருக்கும் ஐயம் முறையாக தீர்க்கப்படும்வரை அந்த திட்டத்தை முன்னெடுத்து செல்வதை அரசு நிறுத்தி தீவிர மறுசிந்தனை செய்ய வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்துக்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
- காமன்வெல்த்: தொடர்கிறது இந்தியாவின் தங்க வேட்டை, மகளிர் டேபிள் டென்னிஸில் தங்கம்
- ரசாயன தாக்குதல்: சிரியா, ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- காவிரி: ரஜினியின் ஆலோசனை பலனளிக்குமா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications