ஹெலிகாப்டர் ஊழல்: இத்தாலிக்கான தூதருடன் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆலோசனை
ரோம்: நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பாக இத்தாலிக்கான இந்திய தூதர் பசந்த்குமாருடன் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆலோசனை நடத்தியுள்ளார்.
இத்தாலி தலைநகர் ரோமில் அண்மையில் ஆட்கடத்தல்கள் தொடர்பாக சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டுக்குப் பின்னர் இத்தாலிக்கான இந்திய தூதர் பசந்த் குமாரை ரஞ்சித் சின்ஹா சதித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இத்தாலியில் நடைபெற்று வரும் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சின்ஹா கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்த ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக கூடுதல் தகவல்களை இத்தாலிய அதிகாரிகளிடம் இருந்து பெறுவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்திய ராணுவத்துக்கு ரூ. 3,600 கோடி சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய விமான படையின் முன்னாள் தலைவர் எஸ்பி தியாகி உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டையடுத்து இத்தாலி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications