ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று குளியல் போட்ட ஒபாமா, புஷ், பஃப்பெட், ஜக்கர்பர்க், பில் கேட்ஸ்
நியூயார்க்: ஏ.எல்.எஸ். நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐஸ் பக்கெட் சவாலை பல பிரபலங்கள் ஏற்றுள்ளனர்.
ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சவாலை உலக பிரபலங்களில் பலர் ஏற்று தங்கள் தலையில் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர். மேலும் இந்த சவாலை ஏற்கும் ஒவ்வொருவரும் 3 பேரை கைகாட்டி அவர்களை இந்த சவாலை ஏற்குமாறு கூற வேண்டும்.
அப்படி ஐஸ் பக்கெட் சவாலை ஏற்ற பிரபலங்கள் யார், யார் என்று பார்ப்போம்.

ஒபாமா
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஜார்ஜ் புஷ்
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று ஒரு பக்கெட் நீரை தன் தலையில் ஊற்றிக் கொண்டார்.

வாரன் பஃப்பெட்
பங்குச்சந்தை முதலீட்டாளர், புத்தக எழுத்தாளர், சமூக சேவை ஆர்வலர் என்று பன்முகம் கொண்ட வாரன் பஃப்பெட்டும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுள்ளார்.

பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா ஆகியோரும் இந்த சவாலை ஏற்றுள்ளனர்.

ரொனால்டோ
பிரபல போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுள்ளார்.

ஓப்ரா, காகா
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஓப்ரா வின்ப்ரே, பிரபல பாப் பாடகி லேடி காகா, பாடகர் ஜஸ்டின் பீபர் ஆகியோரும் சவாலை ஏற்றுள்ளனர்.

ஜோக்கோவிச்
பிரபல டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச், ஹாலிவுட் நடிகர்கள் ராபர்ட் டவ்னி ஜுனியர், ஜஸ்டின் டிம்பர்லேக், சார்லி ஷீன், பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், பிரபலங்கள் டெய்லர் ஸ்விப்ட், லில் வேய்ன், இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னா ஆகியோரும் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுள்ளனர்.

சானியா
ஐஸ் பக்கெட் சவாலை இந்தியாவுக்கு கொண்டு வந்த பெருமை டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை சாரும். அவரு இந்த சவாலை இரண்டு முறை ஏற்றுள்ளார்.

பிபாஷா, லாரா
பாலிவுட் நடிகைகள் பிபாஷா பாசு, லாரா தத்தா, மந்திரா பேடி, நடிகர்கள் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஹன்சிகா ஆகியோரும் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று தங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர்.

சோனாக்ஷி சின்ஹா
நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ஐஸ் பக்கெட் சவாலை ஏற்குமாறு யாரும் கூறிவில்லை. அவராகவே அந்த சவாலை ஏற்றார். ஆனால் வெறும் பக்கெட்டை தன் மீது கவிழ்த்து நீரை மிச்சப்படுத்திவிட்டேன், ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடை அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சவாலை அனைவரும் ஏற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications