கூகுளின் புதிய “ஆளில்லா” கார்கள் – கலிபோர்னியாவில் சோதனை ஓட்டம்
நியூ யார்க்: உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள உதவும் சாவிகளாக "கூகுள்", "யாஹூ" உள்ளிட்ட தேடு பொறிகள் உதவுகின்றன.
இவற்றில் "கூகுள்" தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர்.
அவ்வகையில், உலகளாவிய அளவில் இணையதளங்களுக்கான "சர்ச் என்ஜின்"களில் ஜாம்பவானாக "கூகுள்" திகழ்ந்து வருகிறது.

ரோபாட்டிக் ஜாம்பவான்:
உலகின் மிக சிறந்த் ரோபோட்டிக் தொழில்நுட்ப துறையிலும் கூகுள் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

வலை வீசிய கூகுள்:
இந்த தொழில் நுட்பத்துடன் ஏதாவது ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க நினைத்து, அதற்காக சில கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு "கூகுள்" வலை வீசியது.

ரோபோடாக்சிகள்:
கார் உற்பத்தி தொழில் நுட்ப ரகசியங்களை கூகுளுக்கு தர விரும்பாத முன்னணி நிறுவனங்கள் அதனுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. எனவே, தாமாகவே கார் உற்பத்தி செய்ய கூகுள் முடிவு செய்தது. அதன்படி, டிரைவரே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டது.

கூகுளின் தொழில்நுட்பங்கள்:
இவை டிரைவர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் பொருத்தியுள்ளது.

தடுக்கப்படும் விபத்து:
இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

சோதனை ஓட்டம்:
இந்த கார்கள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா சாலைகளில் சோதனை ஒட்டம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, தானியங்கி தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், அசம்பாவித சூழ்நிலைகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் காரின் முன் இருக்கையில் தேர்ச்சி பெற்ற ஒரு டிரைவரும் அமர்ந்து செல்கிறார்.

கூகுளின் நம்பிக்கை:
வெகு விரைவில், மனிதர்களின் தலையீடே இல்லாமல், முற்றிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கார்கள் இயங்கக் கூடிய சாதனை குறியீட்டை எட்டி விடுவோம் என்று இந்த அதிநவீன கார் தயாரிப்பின் திட்ட இயக்குனர் க்ரிஸ் அர்ம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனியே விற்பனை:
2017 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகையான சோதனை கட்டங்களும் நிறைவடைந்து, இந்த டிரைவர் இல்லா கார்கள் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகல் கனவுடன் பயணம்:
இது நிறைவேறி விட்டால், கம்ப்யூட்டர் மூலம் போக வேண்டிய இடத்தின் பெயரை சொல்லி கட்டளையிட்டு விட்டு, காரின் உரிமையாளர்கள் உள்ளே படித்துக் கொண்டோ, டி.வி. பார்த்தபடியோ, அரை தூக்கத்தில் பகல் கனவு கண்டபடியோ பாதுகாப்பாக செல்லும் அந்த அதிசய அனுபவம் நிகழத்தான் போகிறது.

மரணங்கள் குறையும்:
இவ்வகையிலான தொழில்நுட்பம் அனைத்து ரக வாகனங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் போது, காலப்போக்கில் சாலை விபத்து தொடர்பான மரணங்கள் வெகுவாக குறையும் என்று நிச்சயமாக நம்பலாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications