இனி நபிகள் நாயகத்தை வரைய மாட்டேன்: சார்லி ஹெப்டோ கார்டூனிஸ்ட்
பாரீஸ்: இனி தான் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து வரையப் போவது இல்லை என்று சார்லி ஹெப்டோ பத்திரிக்கை கார்டூனிஸ்ட் லஸ் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயக்ததை கிண்டல் செய்து கார்டூன்கள் வெளியிட்டதால் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் கடந்த ஜனவரி மாதம் புகுந்த 2 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர், 4 கார்டூனிஸ்டுகள் உள்பட 12 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல் நடந்த பிறகு வெளியான சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் மீண்டும் நபிகள் நாயகத்தின் கார்டூன் இருந்தது. இந்நிலையில் அட்டைப்படத்திற்காக அந்த கார்டூனை வரைந்த பிரான்சை சேர்ந்த கார்டூனிஸ்டான லஸ் கூறுகையில்,
நபிகள் நாயகம் மீதான ஆர்வம் போய்விட்டது. எப்படி சார்கோஸியின் கார்டூனை வரைந்து களைத்துப்போனேனோ அதே போன்று தான். அதனால் இனிமேல் நபிகள் நாயகத்தின் கார்டூனை வரையப் போவது இல்லை. தீவிரவாதிகள் வெற்றி பெறவில்லை. ஒட்டுமொத்த பிரான்ஸும் பயந்திருந்தால் அவர்கள் வென்றிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிக்கைக்கு பல முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தீவிரவாதிகள் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications