நபிகள் நாயகத்தின் கார்டூனுடன் வெளியானது சார்லி ஹெப்டோவின் சிறப்பு பதிப்பு
பாரீஸ்: நபிகள் நாயகத்தின் கார்டூனுடன் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் சிறப்பு பதிப்பு இன்று வெளியானது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை தொடர்ந்து நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன்கள் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர் ஸ்டெபனீ சார்போனியர், 4 கார்டூனிஸ்டுகள் உள்பட 12 பேர் பலியாகினர்.

நபிகள் நாயகத்திற்காக பழிவாங்கிவிட்டதாக அந்த தீவிரவாதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த கொடூரத் தாக்குதலுக்கு பிறகும் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தின் கார்டூனை வெளியிட சார்லி ஹெப்டோ முடிவு செய்தது. பத்திரிக்கையின் சிறப்பு பதிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன் அட்டைப்படத்தில் நபிகள் நாயகத்தின் கார்டூனுடன் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது என்ற வாசகம் உள்ளது.
இந்த சிறப்பு பதிப்பில் தீவிரவாதத்தை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை பாரீஸில் நடந்த மாபெரும் பேரணி பற்றிய புகைப்படங்களும் உள்ளன. அந்த பேரணியில் உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட 16 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பதிப்பை முதலில் 10 லட்சம் பிரதிகள் வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் கிராக்கி அதிகமாக உள்ளதால் இன்று 30 லட்சம் பிரதிகளை வெளியிடப்பட்டுள்ளனர்.
சிறப்பு பதிப்பில் நபிகள் நாயகத்தின் கார்டூன் இருப்பதற்கு முஸ்லீம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications