பிசினசில் அண்ணன் ஜார்சை பின்னுக்குத் தள்ளுவாரா குட்டி இளவரசி சார்லெட்??
லண்டன்: பிறந்து சில நாட்களே ஆன இங்கிலாந்து குட்டி இளவரசியால் பிரிட்டன் பொருளாதாரத்தில் நிறைய மாற்றம் வரும் என்கிறார்கள் அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள். தற்போதைய கணக்குப்படி அவரது மதிப்பு ரூ. 770 கோடி என்கிறார்கள்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (32). இவரது மனைவி கேட் மிடில்டன். இந்த தம்பதியருக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு இளவரசர் ஜார்ஜ் எனப் பெயரிடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான கேத் மிடில்டனுக்கு கடந்த 2ம் தேதி அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இக்குழந்தைக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்புக்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிறந்து சில நாட்களே ஆனபோதும், இந்தக் குட்டி இளவரசியால் பல பொருட்களின் வியாபாரம் சூசு பிடித்துள்ளது.

கொண்டாட்டம்...
இங்கிலாந்து இளவரசி பிறந்ததைக் கொண்டாடும் வகையில், லண்டனில் குழந்தையின் படம் பொறித்த கோப்பைகள், பீங்கான் தட்டுகள், டி-சர்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

வளர வளர உயரும்...
விரைவில் இது ரூ. 770 கோடி வர்த்தகத்தை தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இக்குழந்தை 10 வயதை அடைவதற்குள் இந்த வர்த்தகம் ரூ. 900 கோடியாக விரிவடையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கேட்டை பின்பற்றுவார்கள்...
இதுகுறித்து, ஆடை வடிவமைப்பு ஆலோசகர் பாட்ரிசியா டேவிட்சன் கூறுகையில், ‘குழந்தை எதை உடுத்துகிறாள் என்பதை ஒவ்வொருவரும் கூர்ந்து கவனிப்பார்கள். கேட், தன் குழந்தைக்கு எந்த உடைகளை வாங்குகிறார் என்பதை பார்த்து, அதே மாதிரியான உடைகளை மக்கள் வாங்குவார்கள்.

ஜார்ஜை விட...
இதே போல் தான், கேட் அணியும் உடைகள், நகைகள் போன்றவற்றை, மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். ஜார்ஜை விட, பெண் குழந்தை அதிக வருவாயை ஈட்டிக் கொடுப்பாள் என எதிர்பார்க்கிறேன்' என்றார்.

சாதனையை முறியடிப்பார்...
வில்லியமின் முதல் குழந்தையான ஜார்ஜ், 2013ல் பிறந்தபோது, பல்வேறு நினைவுப் பொருட்கள் மூலம் ரூ. 2,381 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. விரைவில் அண்ணனின் சாதனையை இந்தக் குட்டி இளவரசி மிஞ்சி விடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications