புடினுக்குப் போட்டியாக நடிகையின் "டாப்லெஸ்" குதிரை சவாரி.. போட்டோவைத் தூக்கிய இன்ஸ்டாகிராம்!
லாஸ் ஏஞ்சலெஸ்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் ஆணாதிக்க குணத்தைக் கிண்டலடிக்கும் வகையில் புடினைப் போலவே மேலாடை இல்லாமல் குதிரை மீது சவாரி செய்து அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார் அமெரிக்க காமெடி நடிகை செல்சீ ஹேன்ட்லர். ஆனால் இந்தப் படத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி இன்ஸ்டாகிராம் அதைத் தூக்கி விட்டது.
பெண்கள் குறித்து புடின் முன்பு தெரிவித்த கருத்துக்கள் ஆபாசமானவை, செக்ஸியானவை, ஆணாதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துபவை என்று செல்சீ குறை கூறியுள்ளார்.
குறிப்பாக முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் மிகவும் பலவீனமானவர் என்று புடின் முன்பு கூறியதையும் விமர்சித்துள்ளார் செல்சீ. இதற்குப் பதிலடியாக ஒரு காரியத்தை செய்துள்ளார் செல்சீ.

புடினைப் போலவே
முன்பு புடின் மேலாடை இல்லாமல் குதிரையில் சவாரி செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது அதைக் கிண்டலடித்து செல்சீயும் ஒரு போட்டோவைப் போட்டுள்ளார்.

மேலாடை இல்லாமல்
ஒரு குதிரை மீது மேலாடை இல்லாமல் செல்சீ அமர்ந்து சவாரி செய்வது போல அந்தப் படம் உள்ளது. அதை இன்ஸ்டாகிராமில் அவர் போட்டிருந்தார்.

எங்களாலும் முடியும்
அதில், ஒரு ஆண் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், அதை செய்யும் உரிமை பெண்களுக்கும் உண்டு. அதை விட சிறப்பாகவும் செய்வோம் #kremlin' என்று அதில் செல்சீ கூறியிருந்தார்.

ஸாரி சொன்ன இன்ஸ்டாகிராம்
ஆனால் இந்தப் படத்தை தடை செய்து விட்டது இன்ஸ்டாகிராம். இதை அனுமதிக்க முடியாது என்று அது கூறியுள்ளது.

இதுதான் செக்ஸிஸ்ட் போக்கு
இதற்கு செல்சீ கண்டனம் தெரிவித்துள்ளார். இது செக்ஸிஸ்ட் போக்காகும் என்று அவர் கூறியுள்ளார். புடினை விட நான் சிறந்தவள், சிறந்த உடலமைப்பு கொண்டவள் என்பதை நிரூபிக்க எனக்கு உரிமை உள்ளது. அதை இன்ஸ்டாகிராம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications