சிகாகோவில் வானவேடிக்கை, டான்ஸ் என்று களைகட்டிய அரசு தீபாவளி கொண்டாட்டம்
சிகாகோ: சிகாகோவில் உள்ள அரோரா அதிகாரப்பூர்வமாக தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த முதல் அமெரிக்க நகரம் ஆகும்.
அமெரிக்காவின் சிகாகோவின் புறநகர் பகுதியான அரோரா நகரில் அரசு சார்பில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு சார்பில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
வேலை நாளில் தீபாவளி வருவதால் வார இறுதியில் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். இந்திய நகரங்களின் பாரம்பரிய நடனங்கள், பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடப்பட்டது.
இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த இந்திய-அமெரிக்க குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வெளியே வானவேடிக்கை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரோரா மேயர் டாம் வீஸ்னர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் பேட்டரி அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது. இலினாய்ஸ் மாநிலத்தில் அதிக மக்கள் தொகை உள்ள இரண்டாவது நகரம் அரோரா என்பது குறிப்பிடத்தக்கது. அரோராவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி(பாலாஜி) கோவில் உள்ளது. அடுத்த ஆண்டு மிகப் பெரிய அளவில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications