சிகாகோவில் ஜன 25-ல் பொங்கல் விழா - நீயா நானா கோபி தலைமையில் விவாதமேடை!

Subscribe to Oneindia Tamil

சிகாகோ: சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 25, 2014 சனிக்கிழமை அன்று போலிங்புரூக் உயர்நிலைப் பள்ளியில் (Bolingbrook High School, 365 Raider Way, Bolingbrook, IL 60440) இந்த விழா நடக்கிறது.

Chicago Tamil Sangam's Pongal Vizha on Jan 25th

இதுகுறித்து சிகாகோ தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிகாகோ தமிழ்ச் சங்கம், ஒவ்வொரு ஆண்டும், தனது முயற்சிகளை மேம்படுத்தி வருவதுடன், பல்வேறு நவீன சிந்தனைகளை தனது செயல்பாடு மூலமாக உட்புகுத்துவதில் முழு கவனத்தை செலுத்தி வருகிறது.

தமிழர்களின் பாரம்பிரிய கோட்பாடுகளையும் அதன் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுவதில் ஒருநாளும் சிகாகோ தமிழ் சங்கம் தவறியதில்லை. அதன் தன் மேம்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சியாக இவ்வாண்டின் பொங்கல் விழா நிகழ்சிகளை (Pongal Vizha-2014) சிகாகோ தமிழ்ச் சங்கம் புதுப் பொலிவுடன் வழங்க முடிவு செய்துள்ளது.

தைத் திங்களின் பெருமையை சிறப்பிக்கும் விதமாக, தமிழர்களின் கிராமிய-பாரம்பரிய நடனம், குறு நாடகம், கவிதை, பலகுரல் விகடம், நகைச்சுவைப் பேச்சு மற்றும் பல நிகழ்சிகளை நம் முன் நிறுத்த ஏற்பாடு செய்துள்ளது.

இவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக, விஜய் டிவி "நீயா - நானா" புகழ் திரு. கோபிநாத் அவர்களின் விவாத மேடை நிகழ்ச்சி (தலைப்பு - பெற்றோர்கள் பிள்ளைகளின் சுதந்திரத்தில் - அதிகமாக தலையிடுகிறார்கள்! தலையிட வேண்டிய அவசியம் இருக்கிறது!!) நடைபெறவிருக்கிறது.

மேலும் இவ்வாண்டு, சிகாகோ தமிழ்ச் சங்கம் தனது சமுதாய பணிகளை மேம்படுத்தும் விதமாக அரோராவில் இயங்கும் HESED காப்பகத்திற்கு (HESED house) உதவி புரியும் வகையில் சில நன்கொடை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

உங்கள் ஆதரவை என்றும் எதிர்நோக்கும் சிகாகோ தமிழ் சங்கம், உங்களை இந்நிகழ்ச்சிக்கு அன்புடன் வரவேற்கிறது.

உங்கள் நேரத்தை கருத்தில் கொண்டு, நுழைவுசீட்டுகளை இனையதளம் வாயிலாக பெரும் வசதியை சிகாகோ தமிழ்ச் சங்கம் அறிமுகபடுத்தி உள்ளது. உங்கள் நுழைவு சீட்டுகளை பெற "www.chicagotamilsangam.org" த்தை அணுகவும்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+