Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 நாட்கள்.. அமேசான் காட்டில் உயிருடன் வாழ்ந்த 4 குழந்தைகள்! பத்திரமாக மீட்டு அசத்திய ராணுவம்

Subscribe to Oneindia Tamil

பொகோட்டா: அமேசான் அடர் காடுகளில் சிக்கி கடந்த 40 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 4 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 1ம் தேதியன்று Cessna 206 ரக விமானத்தில் ஒரு தாய், அவரது கணவர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு முதியவர் என 3 பெரியவர்களும், 13,9,4 மற்றும் 1 வயது கொண்ட நான்கு சகோதர சகோதரிகளும் பிரேசில் நாட்டின் அரராகுவாராவில் இருந்து 300 கி.மீ தொலைவுள்ள கொலம்பியா நாட்டின் சான் ஜோஸ் டெல் குவேரியாருக்குப் பயணிக்க தொடங்கினர். இந்த விமானம் மணிக்கு 260 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. 6 இருக்கைகளை கொண்ட இது மிகவும் சக்தி வாய்ந்த ஒற்றை என்ஜின் அமைப்பை கொண்டிருக்கிறது.

Children trapped in the Amazon forest are safely rescued after 40 days

அன்று வானம் தெளிவாக இருந்தது. மழை, புயல் என எதுவும் பயணத்தில் குறுக்கிடவில்லை. குழந்தைகள் குதுகலத்துடன் இருந்தனர். ஜன்னல் வழியாக மெல்ல நகரும் பூமியன் மரங்களையும், வேகமாக நகரும் மேகங்களையும் ரசித்தவாறு கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் சில நிமிடங்களில் திடீரென விமானத்தில் அலறல் சத்தம்.தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

விமானி அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு விநாடியும் 'மே டே' எனும் அவசர சமிஞ்சை சொல் விமானியிடமிருந்து கூடுதல் சத்தத்துடனும், பதட்டத்துடனும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்திருக்கிறது. கடைசியாக அந்த குரல் நின்றுவிட்டது.

கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, அவர்கள் உடனடியாக ராணுவத்திற்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். சில மணி நேரங்கள் கழித்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை ராணுவத்தினர் அடையாளம் கண்டிருக்கின்றனர். விமானத்தில் பயணித்த தாய், தந்தை மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு முதியவர் என 3 பேரின் சடலங்கள் அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.

ஆனால் மற்ற 4 குழந்தைகளின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. எனவே உடனடியாக அவர்களை தேடும் பணியில் இறங்கினர். சுமார் 55 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட அமேசான் காடுகளில் தொலைந்துபோனவர்களை தேடுவது என்பது, வங்காள விரிகுடாவில் வாட்டர் பாட்டில் மூடியை போட்டுவிட்டு தேடுவதை போன்றதாகும். மட்டுமல்லாது இந்த காடுகளில் ஏராளமான வேட்டை விலங்குகளும் இருக்கின்றன.

இங்குள்ள ஜாகுவார் சிறுத்தை, முதலையையே வேட்டையாடும் அளவுக்கு வலுவானதாகும். அதேபோல, ஆளையே விழுங்கும் அளவு கொண்ட மலைப்பாம்பு, விஷ பாம்புகள் என ரத்தத்திற்கும், சதைக்கும் ஏங்கும் பல மாமிச உண்ணிகள் இக்காட்டில் வாழ்கின்றன. குழந்தைகள் இந்த மிருகங்களிடம் சிக்கிக்கொண்டார்களா? அல்லது பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்கிற யோசனையில் தேடுதல் வேட்டை தொடங்கியது.

தேடுதலின் போது விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து வெகு தொலைவில் ராணுவத்தினர் பார்த்த கட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது, குழந்தையின் பால் புட்டியும், சிறிய அளவிலான டென்ட் ஒன்றும் குறிப்பிட்ட இடத்தில் இருந்திருக்கிறது. இதை பார்த்த பின்னர்தான் வீரர்களுக்கு உயிரே வந்தது. குழந்தைகள் உயிருடன் இருக்கும் விஷயம் உடினடியாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்த மறு நொடி அவர் ஓர் உத்தரவு போட்டார்.

என்ன நடந்தாலும் சரி, எவ்வளவு முயற்சி எடுத்தாவது அந்த குழந்தைகளை மீட்க வேண்டும் என்பதுதான் அந்த ஆர்டர். இந்த உத்தரவு பிறப்பித்தபோது போது தேதி மே.15. குழந்தைகளை தேட 8 திசைகளிலும் ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். மட்டுமல்லாது, குழந்தைகள் குறித்து அவர்களது பாட்டி சில வார்த்தைகளை பேசியிருந்தார். அது ஸ்பீக்கர் மூலம் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டு காடு முழுவதும் ஒலிபரப்பப்பட்டது. நாட்கள் சென்றுக்கொண்டே இருந்தன. அடுத்த 14 நாட்கள் வரை குழந்தைகள் எந்த திசையில் போனார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தேடுதல் வேட்டையில் குழந்தைகளின் தடம் பிடி கிட்டாத நிலையில், உள்ளூர் பழங்குடி மக்களின் உதவியை ராணுவம் நாடியது. பழங்குடியினர் ஒப்புக்கொள்ள, அதுவரை ராணுவம் சென்ற பாதைகள் மாற்றப்பட்டன. காடுகளை பழங்குடியினர் வித்தியாசமாக அணுகினர். அதுவரை தாங்கள் பார்த்திராத காட்டின் மறு பக்கத்தை ராணுவத்தினர் முதன் முறையாக பார்த்தனர். ஓரிரு நாட்களிலேயே குழந்தைகளின் காலடி தடங்கள் கண்ணில் தென்பட்டது.

தேடுதலின் போது எதுவெல்லாம் கிடைத்ததோ அதுவெல்லாம் அந்நாட்டின் அன்றைய தலைப்பு செய்தியாகியது. பழங்குடியினர் காடுகளை அலசவில்லை. மாறாக கவனிக்க தொடங்கினர். அவர்கள் தேடவில்லை, சமிஞ்சைகளை பின் தொடர்ந்தனர். அவர்களிடம் ராணுவத்தினரை போன்று கண்மூடித்தனமான தைரியம் இல்லை, ஆனால் நம்பிக்கை இருந்தது. இந்த நம்பிக்கை, எப்படியாவது பிழைத்துக்கொள்வோம் என்று எண்ணிக்கொண்டிருந்த குழந்தைகளிடத்தில் இவர்களை கொண்டு சேர்த்தது.

இறுதியாக 40 நாட்களுக்கு பின்னர் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர். நம்பிக்கை வீண் போகவில்லை. உடனடியாக குழந்தைகள் தலைநகர் பொகோட்டாவிற்கு அழைத்து வரப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த தேடுதல் வேட்டையில் முழு மூச்சாக இறங்கிய ராணுவத்தினருக்கும், அவர்களுக்கு வழிக்காட்டிய பழங்குடியினருக்கும் அதிபர் நன்றி தெரிவித்திருக்கிறார். நாடே இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது. மக்கள் ராணுவத்தினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி வருகின்றனர்.

இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை உயிரினங்களும் கடலையும், காடுகளையும் தாண்டிதான் வந்திருக்கிறது. ஏன் மனிதர்கள் கூட அப்படிதானே! கடலும், காடும் தனக்கு தேவைப்படாத எதையும், எப்போதும் தனக்குள் வைத்துக்கொள்ளாது என்று எங்கோ படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+