குன்மிங் ஏர்லைன்ஸின் "குண்டக்க மண்டக்க" சடங்கு.. போராட்டத்தில் குதித்த சீன விமானப் பணிப்பெண்கள்
பீஜிங்: சீனாவில் புதிதாக பணியில் சேரும் பெண் விமான ஊழியர்களுக்கு வரவேற்பு தருகிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் மோசமான சடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் சீன நாட்டு பிரபல விமான நிறுவனப் பணிப்பெண்கள் தற்போது இறங்கியுள்ளனர்.
சீனாவின் பிரபல விமான நிறுவனமான குன்மிங் ஏர்லைன்ஸில் புதிதாக விமான பணிப்பெண்ணாக பணிபுரிய வருவோரை வித்தியாசமான ஒரு சடங்கின் மூலமாக இதன் பணியாளர்கள் பல ஆண்டுகளாக வரவேற்று வருகின்றனர்.
புதிதாக விமான பணிப்பெண்ணாக பணிபுரிய வரும் பெண்கள் இந்த விமானத்தில் உள்ள பயணிகள் தமது லக்கேஜை வைக்கும் பெட்டியில் அடைத்து வைக்கின்றனர்.

லக்கேஜ் பெட்டிக்குள் அடக்கம்:
புதிய பெண் பணியாளர்களை, ஆண் பணியாளர்கள் இந்த லக்கேஜ் பெட்டிக்குள் படுக்குமாறு பணிக்கின்றனர். சில நேரம் பெட்டியை மூடி விடவும் செய்வார்களாம். பணியில் சேர்ந்த முதல் 30 முதல் 50 மணி நேரத்திற்குள் இந்த "ராக்கிங்" போன்ற செயலில் ஆண் பணியாளர்கள் ஈடுபடுகின்றனராம்.

ஏற்றுக் கொள்ளும் பெண்கள்:
இதை தவிர்க்க முற்படும் பெண்களை திமிர் பிடித்தவள், சரிப்பட்டு வர மாட்டாள் என ஆண் பணியாளர்கள் கருதுவதால் வேறுவழியின்றி சுமார் ஐந்து ஆண்டுகளாக இந்த தண்டனையைப் பல பெண்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம்:
இது தொடர்பாக அலுவலகத்தில் புகாரளித்தும் யாரும் கண்டுகொள்ளாததால் கடந்த வார இறுதியில் சடங்கு என்ற பெயரில் இதுபோல அடைக்கப்படும் பெண்ணின் புகைப்படத்தை சமூக தளத்தில் சில பணிப்பெண்கள் வெளியிட்டனர்.

ஊடகங்கள் முன் மன்னிப்பு:
இது இந்நாட்டு இணையங்களில் தலைப்பு செய்தியாகவே, இந்த விமான நிறுவனத்தின் நிர்வாகிகள் கடந்த திங்களன்று ஊடகங்கள் முன்னர் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்:
எனினும், இதுவரை இச்சம்பவம் தொடர்பாக விமான பணிப்பெண்களிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை எனவும், விரைவில் இப்படிச் செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஊழியர்களின் இந்தக் கூற்று பயணிகளுக்கோ, பயணத்துக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications