தைவானுக்கு எதிராக போர் பிரகடனம்.. சீன அதிபரிடம் இருந்து பறந்த உத்தரவு.. தயாராகும் 'சிகப்பு' ராணுவம்
பெய்ஜிங்: தைவானுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, அந்நாட்டின் மீது விரைவில் போர் பிரகடனம் செய்யும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று சீன ராணுவத் தலைமையகத்துக்கு நேரடியாக வந்து, போருக்கு தயாராகுமாறு அதிரடி உத்தரவை பிறப்பித்து சென்றுள்ளார்.
சீன அதிபரின் இந்த திடீர் உத்தரவால் தைவானில் பெரும் பதற்றமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும், மேற்கத்திய நாடுகளும் சீனாவின் அறிவிப்பால் சற்று ஆடிப் போயிருக்கின்றன.

சீனாவும், தைவானும்..
சீனாவில் மன்னர் ஆட்சி முடிவடைந்ததும், சீன தேசியக் கட்சி 1911-ம் ஆண்டு அரியணை ஏறியது. 1927-இல் ஆளும் கட்சிக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சி பெரும் கலகத்தில் ஏற்பட்டது. சுமார் 22 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த உள்நாட்டு போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். போரில் தோல்வி கண்ட சீன தேசியக் கட்சியினரும், ஆதரவாளர்களும் உயிருக்கு பயந்து தென்சீனக் கடலில் உள்ள தீவுப்பகுதியான தைவானுக்கு குடியேறினர். மேலும், தைவானை சுதந்திர நாடாகவும் அறிவித்தனர். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத சீனா, தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது.

தயங்கிய சீனா..
எனினும், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தைவாகனுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவை அளித்ததால், தைவானை தங்களுடன் இணைக்க சீனாவால் முடியவில்லை. இந்நிலையில், சமீபகாலமாக தைவானை சீனாவுடன் இணைத்தே தீருவது என அதிபர் ஜி ஜின்பிங் உறுதியாக உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட சீனா, தைவான் மீது போர் தொடுப்போம் என பகிரங்கமாக மிரட்டியது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரவு நாடுகள் தைவானுக்கு பக்கபலமாக இருப்பதால் போர் தொடுக்க சீனா தயங்கி வந்தது.

'சிங்கத்தை சீண்டாதீர்கள்..'
ஆனால், சீனாவின் கோபத்தை தூண்டும் விதமாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் அண்மையில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இது, சீனாவை சீண்டிப் பார்க்கும் நடவடிக்கை என்றும், சிங்கத்தின் அமைதியை அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் ஜி ஜின்பிங் வெளிப்படையாக அறிவித்தார். இந்த சூழலில், பிரிட்டனில் ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றதும், தைவானுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். மேலும், சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் வர்த்தகத்துறை அமைச்சர் கிரெக் ஹேண்ட்ஸும் தைவானுக்கு சென்றிருந்தார். இது, சீனாவை பொறுமை இழக்கச் செய்தது.

'போருக்கு தயாராகுங்கள்..'
இந்நிலையில் தான், பெய்ஜிங்கில் உள்ள சீன ராணுவத்தின் தலைமையகத்துக்கு அதிபர் ஜி ஜின்பிங் நேற்று நேரடியாக சென்றுள்ளார். அப்போது அவர், 'போருக்கு முழுவீச்சில் தயாராகுங்கள்' என உத்தரவிட்டார். "ஒட்டுமொத்த ராணுவமும் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து போருக்கு தயாராகுங்கள். போருக்கு தயாராகி சீனாவை புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லுங்கள்" என ஜின்பிங் பேசியுள்ளார். ஆனால், எந்த நாட்டுடன் போர் என அவர் வெளிப்படையாக கூறவில்லை. எனினும், தைவானை மறைமுகமாக குறிப்பிட்டே ஜின்பிங் இவ்வாறு பேசியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தைவானுக்கு எதிராக சீனா விரைவில் போர் பிரகடனம் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications