அந்தரத்தில் "ரோபோட் ஆர்ம்".. கீழே சுழலும் பூமி.. விண்வெளியில் "ஸ்பேஸ்-வாக்" செய்த சீன வீரர்கள்!
பெய்ஜிங்: விண்வெளியில் சீனா டியாங்யாங் என்ற ஸ்பேஸ் ஸ்டேஷனை கட்டி வரும் நிலையில் இன்று சீனாவின் 2 விண்வெளி வீரர்கள் "ஸ்பேஸ் வாக்" செய்தனர்.
ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நுழைய சீனாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான மோதல் காரணமாக இந்த தடை உள்ளது. இதனால் சீனா டியாங்யாங் என்ற தனி விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுயமாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.
இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைவதற்காக சீனா 3 விண்வெளி வீரர்களை கடந்த சில நாட்களுக்கு விண்ணிற்கு முன் அனுப்பியது. Long March-2F ராக்கெட் மூலம் சீனா இவர்களை விண்ணுக்கு அனுப்பியது.

கட்டுமானம்
கடந்த ஏப்ரல் 29ம் தேதிதான் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தின் கோர் மாடலை சீனா விண்ணிற்கு ஏவியது. இந்த நிலையில் அங்கு சீனா மனிதர்களை அனுப்பி உள்ளது. டியாங்யாங் முழுமையாக கட்டி முடிக்கும் பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். வரும் நாட்களில் மேலும் சில சீன வீரர்கள் இவர்களின் விண்ணிற்கு அனுப்பப்பட்ட 3 பேரில் 2 பேர் ராணுவத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

பணிகள்
அடுத்தடுத்த மாதங்களில் நிறைய ஸ்பேஸ் ஸ்டேஷன் கருவிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள நிலையில், அதை கோர் மாடலுடன் இணைக்கும் பணியில் இவர் ஈடுபடுவார்கள். விண்வெளி ஆராய்ச்சிகள், ஸ்பேஸ் ஸ்டேஷன் விரிவாக்கம், ஸ்பேஸ் வாக் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தில், விண்வெளியில் 3 மாதம் இவர்கள் இருப்பார்கள்.

ஸ்பேஸ் வாக்
இவர்கள் ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் இணைந்த நிலையில், இன்று ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து ஸ்பேஸ் வாக் (ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியே மிதந்தபடி பணிகளை செய்வது) மேற்கொண்டனர். விண்வெளியில் முதல் ஸ்பேஸ் வாக்கை இவர்கள் இருவர் மேற்கொண்டனர். ஸ்பேஸ் ஸ்டேஷனின் வெளிப்புறத்தில் இருக்கும் ரோபோட் கையை செட் செய்வதற்காக இவர் 15 மீட்டர் தூரம் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் மேற்கொண்டனர்.

பயன்படுத்தினார்கள்
அந்தரத்தில் மிதந்தபடி இவர்கள் இந்த பணிகளை செய்தனர். மூன்று விண்வெளி வீரர்கள் அங்கு உள்ள நிலையில் கமாண்டர் நை ஹாய்சங் ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளவில்லை . லியு போமிங், டாங் ஹூங்போ ஆகிய இரண்டு பேரும் ஸ்பேஸ் வாக் செத்தனர். இது சீன தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதற்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு இருந்த ஸ்பேஸ் உடையை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

பாதுகாப்பு
அதோடு வெளியே வளிமண்டத்தில் பறக்காதபடி கொக்கிகள் கொண்ட வயர்கள் மூலம் அவர்கள் ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் பிணைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் வானில் மிதந்து பணிகளை மேற்கொள்ளும் போது கீழே பூமி சுற்றிய சம்பவம் வீடியோவாக பதிவாகி உள்ளது. இதேபோல் ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுமானம் முடியும் வரை மேலும் சிலமுறை இவர்கள் ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications