இனி அப்பாவும் வாடகைக்கு கிடைப்பார்கள்! குளியல் ஹவுசில் குவியும் பெண்கள்! மாற்றி யோசித்த சீனா! அடடே
பெய்ஜிங்: சீனா எப்போதும் புதிய புதிய திட்டங்களை முயற்சித்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சீனாவில் குளியல் ஹவுசில் ‛அப்பா வாடகை' எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் குளியல் ஹவுசில் குவிந்து வரும் நிலையில் இந்த திட்டத்தின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நமக்கு அண்டை நாடாக இருக்கும் சீனாவும் ஒரு மர்மதேசமாகும். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் கூட பிற நாடுகளுக்கு தெரியக்கூடாது என நினைத்தால் பல்வேறு முக்கிய விஷயங்களையும் ரகசியமாக வைத்து விடும் நாடாக சீனா விளங்கி வருகிறது.

மேலும் அடிக்கடி சீனா புதிது புதிய விஷயங்களை கண்டுபிடித்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சீனாவில் ‛வாடகை அப்பா' என்ற பெயரில் குளியல் ஹவுசில் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛வாடகை தாய்' முறையை நாம் அனைவரும் கேள்விபட்டு இருந்தாலும் கூட நமக்கு ‛வாடகை அப்பா' திட்டம் புதிதாக தான் இருக்கிறது.
இந்நிலையில் தான் சீனாவில் அறிமுகமாகி உள்ள ‛வாடகை அப்பா' திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பெண்கள் கூட்டம் கூட்டமாக குளியல் ஹவுசுக்கு படையெடுத்து வருகின்றனர். அப்படி என்ன திட்டம் இது? என நீங்கள் கேட்கிறீர்களா? உங்களுக்கான விடை இதோ..
சீனாவில் வடகிழக்கு பகுதியில் லியோனிங் மாகாணம் உள்ளது. இங்கு ஷென்யாங் எனும் பகுதியில் குளியல் ஹவுஸ் (Bath House) செயல்பட்டு வருகிறது. இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் சென்று குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்காக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குளிக்கும் இடம் உள்ளது.
இந்நிலையில் தான் அந்த குளியல் ஹவுஸ் சார்பில் தற்போது ஆன்லைனில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், ‛தங்களின் குளியல் ஹவுசுக்கு வரும் நபர்களுக்கு வாடகை அப்பா திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'rent a dad' என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதன்படி பெண் ஒருவர் தனது மகனை அந்த குளியல் ஹவுசுக்கு அழைத்து சென்று வாடகை அப்பா திட்டத்தை பயன்படுத்த கூறினால் போதும். இதையடுத்து அங்கு வாடகை அப்பா திட்டத்தில் இருக்குள் ஊழியர் அந்த சிறுவனை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்வார்.
சிறுவனின் உடைகளை மாற்றி ஆண்களுக்கான குளிக்க வைத்து வேறு உடை மாற்றி விட்டு அவனை அவரது தாயிடம் ஒப்படைத்துவிடுவாராம். அதுவரை அந்த பெண் ஓய்வறையில் ஓய்வெடுக்கலாம். இல்லாவிட்டால் அவரும் பெண்களுக்கான பகுதியில் குளிக்கலாம். இந்த திட்டத்துக்கு தற்போது சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. பல பெண்களும் அந்த குளியல் ஹவுசுக்கு தங்களின் மகனுடன் குவிந்து வருகின்றனர்.
அதாவது மகன் சிறுவனாக இருக்கும்போது குளியல் ஹவுசுக்கு செல்லும் பெண்கள் அவர்களை தங்களுடன் அழைத்து செல்ல வேண்டி இருக்கும். இத்தகைய சூழலில் பிற பெண்களால் சுதந்திரமான குளியலை மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தது. இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் தான் தற்போது வாடகை தந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தான் இந்த திட்டத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு அந்த குளியல் ஹவுசில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனி அறைகளும், உணவு, குளிர்பானங்கள், மசாஜ்கள், பொழுதுபோக்கு மற்றும் பிற வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் பெண்களை கவர்ந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications