தங்கத்தை விட மதிப்பு அதிகம்.. சீனா கண்டுபிடித்த அரிய பொக்கிஷம்! டெக் உலகில் காலாவதியாகும் அமெரிக்கா
பெய்ஜிங்: செமிகண்டக்டர், சோலார் பேனல், ஆப்டிகல் பைபர் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிய வகை கனிமத்தை சீனா தனது நாட்டில் பெரும் அளவில் கண்டுபிடித்திருக்கிறது. தங்கததை விட மதிப்பு மிக்கதாக பார்க்கப்படும் இது, நேற்றுவரை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சீனாவின் கண்டுபிடிப்பு, டெக் உலகில் அமெரிக்காவை ஓரம் கட்டும் என்று சொல்லப்படுகிறது.

சீனா கண்டுபிடித்தது என்ன?
'உயர்-தூய்மை குவார்ட்ஸ்' கனிமத்தைதான் சீனா கண்டுபிடித்திருக்கிறது. டெக் மற்றும் மின்னணு துறையில் என்னதான் சீனா மாஸ் காட்டினாலும், இந்த துறையை சார்ந்த பொருட்களின் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவின் 'குவார்ட்ஸ்' கனிமத்தைதான் நம்பியிருந்தது.
குகைகளில், சுரங்கங்களில் இந்த கனிமம் இயற்கையாக கிடைக்கும். ஆனால், நேற்றுவரை இப்படி ஒரு பொக்கிஷம் அவர்கள் நாட்டில் இருப்பது சீனாவுக்கு தெரியாது. எனவே, அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஸ்ப்ரூஸ் பைன் சுரங்கத்திலிருந்து தங்களுக்கு தேவையான கனிமத்தை 80% வரை இறக்குமதி செய்து வந்தது.
சீனாவுக்கு ஜாக்பாட்
இப்போது சீனாவுக்குள் டன் கணக்கில் இந்த கனிமம் 'உயர்-தூய்மையாக' இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே விரைவில் அமெரிக்காவின் சப்ளையை சீனா நிறுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
சீனாவின் இயற்கை வள அமைச்சகம் இந்த கண்டுபிடிப்பு குறித்த வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், "நாங்கள் சுமார் 35 மில்லியன் டன் அளவு கொண்ட 'உயர்-தூய்மை குவார்ட்ஸ்' கனிமத்தை கண்டுபிடித்திருக்கிறோம். இதை புதிய வகை கனிம இனமாக அறிவிக்கிறோம். இதை கொண்டு டெக் துறைக்கு தேவையான பொருட்களை, சொந்த நாட்டிலேயே முழுமையாக உற்பத்தி செய்வோம்" என்று தெரிவித்திருக்கிறது.
ஏன் காஸ்ட்லி?
இது ஏன் இவ்வளவு காஸ்ட்லி, எதற்காக இவ்வளவு டிமாண்ட் என்பது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த கனிமத்தை கொண்டு ஊருவாக்கப்படம் செமிகண்டக்டர்கள் மிக குறைந்த அளவுக்குதான் வெப்பத்தை கடத்தும். எனவே கம்ப்யூட்டர்களின் வேகத்தை அதிகரிக்க முடியும். மட்டுமல்லாது இது நீண்ட நாட்களுக்கு உழைக்கும். சீக்கிரத்தில் கெட்டு போகாது. இதனால் சோலார் பேனல் போன்றவற்றிலும் இதை பயன்படுத்த முடியும். தவிர, அதிநவீன ஒளியியல் கருவிகள், ஆய்வகக் கண்ணாடிப் பொருட்கள், லென்ஸ்கள் மற்றும் சிறப்பு விளக்குகளின் குழாய்கள், அதிக தூய்மை மற்றும் வெப்பத் தாங்கும் திறன் தேவைப்படும் மருத்துவ கருவிகள் தயாரிக்கவும் இதை பயன்படுத்தலாம்.
தங்கத்தை விட எவ்வளவு மதிப்பு மிக்கது?
அமெரிக்காவின் குவாரட்ஸ்ஸுக்கும், சீனாவின் குவாரட்ஸ்ஸுக்கும் இடையே உள்ள வித்தியாசம், தூய்மையின் அளவுதான். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட குவாரட்ஸ், 99.995% சிலிக்கான் டை ஆக்சைடு கொண்டிருக்கின்றன. சாதாரண அமெரிக்க குவாரட்ஸ், கிலோ சில ஆயிரங்களுக்கு விற்பனை செய்யப்படும். ஆனால் 99.995% சிலிக்கான் டை ஆக்சைடு கொண்ட தூய்மையான குவாரட்ஸ் கிலோ கோடியை ரூபாயை தாண்டும். எனவேதான் இதை தங்கத்தை விட மதிப்பு மிக்கது என்று சொல்கிறா்கள்.
ஏற்கெனவே பல அரிய வகை கனிமங்களை வைத்துக்கொண்டு, அமெரிக்காவுக்கு தண்ணீ காட்டிக்கொண்டிருக்கம் சீனா கையில், தற்போது கிடைத்திருப்பது மிகப்பெரிய பொருளாதார ஆயுதம் என்றே சொல்லலாம்.
பாவம் இதன் பிறகு சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு என அமெரிக்காவிடம் எதுவும் இல்லை. எனவே வரும் நாட்களில் சீனா எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications