தொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அசத்தும் சீனா!

கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சீனாவில் 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! தெரிந்து கொள்ள வேண்டியவை

    பெய்ஜிங்: கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சீனாவில் 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 46 பேர் பலியாகி உள்ளனர். 1100 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சீனாவில் மட்டுமின்றி வேறு சில நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

    கொரோனா வைரஸ் எப்படி

    கொரோனா வைரஸ் எப்படி

    இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, வுஹன் நகரம் மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் வெளியே செல்லவும், மக்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வுஹன் நகரம் மத்திய சீனாவில் வருகிறது. இதனால் மத்திய சீனா முழுக்க எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாக்குதல் எப்படி

    தாக்குதல் எப்படி

    அதேபோல் இந்த நோய் தாக்குதலால் தற்போது 4 கோடி பேர் வீட்டிற்கு உள்ளே முடங்கி போய் இருக்கிறார்கள். இதேபோல் வுஹன் நகரம் முழுக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் இருக்கும் மருத்துவ துறையினர்தான் இங்கு நோயாளிகளை கவனித்து வருகிறார்கள். ராணுவத்தில் இருக்கும் மருத்துவர்கள், பாதுகாக்கப்பட்ட உடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்காக பிரத்யேக உடை தயார் செய்யப்பட்டுள்ளது.

    சிகிச்சை முறை

    சிகிச்சை முறை

    இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் நோய் தாக்குதலுக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவமனை ஒன்று வேகமாக கட்டுப்பட்டு வருகிறது. வெறும் 6 நாட்களில் இந்த மருத்துவமனையை கட்ட முடிவு செய்துள்ளனர். நாடு முழுக்க இருக்கும் எல்லா கொரோனா வைரஸ் நோயாளிகளும் இங்கே கொண்டு வரப்படுவார்கள். இங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    பிப்ரவரி செயல்படும்

    பிப்ரவரி செயல்படும்

    இந்த மருத்துவமனை வரும் பிப்ரவரி 2ம் தேதி இரவில் இருந்து செயல்படும். இது மிகவும் நவீன முறையில் கட்டப்பட உள்ளது. இங்கு மொத்தம் 1000 பேர் ஒரே நேரத்தில் சிகிச்சை பெறலாம். மற்ற நோயாளிகளுடன் கொரோனா நோயாளிகள் சேர கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சீனாவின் இந்த துரிதமான நடவடிக்கைகளை உலக நாடுகளும், உலக சுகாதார மையமும் பாராட்டி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+