சீனாவை அழைக்கிறது தாலிபான்: முக்கிய மாற்றத்திற்கு தயாரான ஆப்கான்: கால் பாதிக்கும் ஜின்பிங்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் சீனா முதலீடு செய்ய வேண்டும், எங்கள் நாட்டில் கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொள்ள வேண்டும் என்று சீனாவிற்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கான் அரசியல் வரலாற்றில் இது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஆப்கானிஸ்தான் அந்நிய ஆதிக்கத்தை எப்போதும் விரும்பியது கிடையாது. வரலாற்று ரீதியான படையெடுப்புகள் எதை எடுத்தாலும் அதில் ஆப்கானிஸ்தானின் விடுதலை போராட்டங்கள் நிறைந்து இருக்கும். ஏன் உலகின் பெரிய சாம்ராஜ்யங்களே ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவி இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் ஆட்சி முஜாகிதீன் மூலம் முடிவிற்கு வந்தது, இப்போது அமெரிக்காவின் படையெடுப்பு தாலிபான்கள் மூலம் முடிவிற்கு வந்தது என்று வரலாற்று முழுக்க ஆப்கானிஸ்தான் வெற்றி கொண்டது எல்லாமே பெரிய கைகள்தான்.
நான் ஒருத்தரை அடிச்சி டான் ஆகல.. நான் அடிச்ச எல்லோருமே டான்தான் என்ற கேஜிஎப் வசனம் போல ஆப்கானிஸ்தான் பல பெரிய சாம்ராஜ்யங்களை எதிர்த்து இதுவரை வெற்றியை ருசித்து இருக்கிறது. இதுவரை ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவும், அமெரிக்காவும் போர்களை நடத்தி இருந்தாலும் சீனா ஆப்கானிஸ்தான் மீது கண் வைத்தது கிடைத்தது. சீனா ஆப்கான் மண்ணில் போர் செய்தது கிடையாது.

சீனா
தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் வென்றுள்ளது. தாலிபான்களின் வெற்றிக்கும் அவ்வளவு வெளிப்படையாக சீனா ஆதரவு அளிக்கவில்லை. ரஷ்யாவின் தாலிபான் ஆதரவு காரணமாக சீனாவும் தாலிபான்களை அவ்வப்போது மறைமுகமாக ஆதரித்து வந்தது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம், உய்கூர் இஸ்லாமியர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை தாலிபான் சில இடங்களில் மறைமுகமாக எதிர்த்தும் வந்து இருக்கிறது. இந்த ஒரு விஷயத்தை தவிர சீனாவிற்கும் தாலிபான்களுக்கும் இடையில் பெரிய உறவும் இல்லை, மோதலும் இல்லை.

சீனா நம்பிக்கை
ஆனால் தற்போது அமெரிக்காவின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானை மிகப்பெரிய வாய்ப்பாக சீனா கருதுகிறது. இலங்கை, பாகிஸ்தான் போல ஆப்கானிஸ்தானிலும் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்க, தனது முதலீட்டை ஏற்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே சீனா சில முதலீடுகளை செய்து உள்ளது. சீனாவின் Belt and Road Initiative திட்டத்தை இங்கே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே வேகமாக நடந்து வருகிறது.

இந்தியா
தற்போது இந்தியாவிற்கும் தாலிபான்களுக்கும் இடையில் நல்ல உறவு இல்லை. இந்தியாவும் தாலிபான்களுடன் சமாதானமாகி செல்வதற்கான வாய்ப்பு குறைவுதான். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு சீனாவுடன் நெருக்கமாக செல்ல தாலிபான்களும் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆசியாவில் மிகப்பெரிய பிக்பாஸ் இப்போதைக்கு சீனாதான். பாகிஸ்தான் சீனாவுடன் நட்பாக இருக்கிறது. இதனால் பாகிஸ்தானும் பல வகைகளில் பலன் அடைந்து இருக்கிறது.

அழைப்பு
இந்த நிலையில், பாகிஸ்தானை போல பலன் அடைய சீனாவும் நினைக்கிறது. இதனால்தான், ஆப்கானிஸ்தானில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சீனாவிற்கு தாலிபான் அழைப்பு விடுத்து இருக்கிறது. இது தொடர்பாக தாலிபான் செய்தி தொடர்பாளர் சுகைல் ஷாஹீன் அளித்துள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானை முன்னேற்றுவதால், கட்டுமான பணிகளை மேற்கொள்வதில், அமைதியை நிலைநாட்டுவதில் சீனா முக்கிய பங்கு வகித்து இருக்கிறது.
Recommended Video

பொருளாதாரம்
சீனா மிகப்பெரிய நாடு. அவர்களின் பொருளாதாரம் மிகப்பெரியது. அவர்களுக்கு நிறைய ஆற்றல் உள்ளது. ஆப்கானிஸ்தானை கட்டமைப்பதில், புதுப்பிப்பதில், மொத்த நாட்டையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதில் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்புகிறோம். ஆப்கானிஸ்தானில் சீனா முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும், என்று சீனாவிற்கு தாலிபான் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது.பொதுவாக அந்நியர்களின் ஆதிக்கத்தை விரும்பாத தாலிபான் இப்படி முதல்முறையாக சீனாவின் முதலீட்டை வெளிப்படையாக அழைத்து உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications