"இனி கொரோனா எப்படி வருது பார்ப்போம்.." சீன தம்பதியின் பலே ஐடியா! அடங்கப்பா.. வியந்த நெட்டிசன்கள்
பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கு கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு தம்பதி செய்யும் வினோத செயல் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சீனாவில் இப்போது மிக மோசமான ஒரு கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய சமயத்தில் கூட அங்குப் பாதிப்பு இந்தளவுக்கு மோசமானதாக இல்லை. ஆனால், இப்போது அதையும் தாண்டி மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கொரோனா அலை காரணமாக அங்கு நாடு முழுக்க மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. உயிரிழப்புகள் அதிகரிப்பதால் மருத்துவமனை மட்டுமின்றி, உயிரிழப்புகள் கூட தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மயானங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சீனா
அந்நாட்டு அரசு எந்தவொரு யோசனையும் இல்லாமல் மக்கள் அழுத்தத்திற்குப் பயந்து கொரோனா கட்டுப்பாடுகளை ஒரே நாளில் நீக்கியதே வைரஸ் பாதிப்பு இந்தளவுக்குக் கையை மீறிச் செல்ல முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளுமே கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது. வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுவதால், அங்குப் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தம்பதி
அங்கு கொரோனா பாதிப்பில் இருந்து எஸ்கேப் ஆக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே அங்குள்ள சீன தம்பதி ஒருவர், கொரோனாவில் இருந்து எஸ்கேப் ஆக பலே திட்டம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது மார்கெட்டிற்கு காய்கறிகளை வாங்கச் செல்லும் அந்த தம்பதி, தங்களைச் சுற்றிப் பாதுகாப்பிற்காக ஒரு பிளாஸ்டிக் பேக்கை வைத்துள்ளனர். அது ஒரு குடையில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் எங்குச் சென்றாலும் அந்த கவரும் அவர்களுடன் இருக்கிறது.

வேற லெவல்
இதன் மூலம் வெளியே இருக்கும் கொரோனா உட்பட அனைத்து விதமான வைரஸ்களில் இருந்தும் தப்பிக்க முடியும் என அந்த தம்பதி நம்புகிறது. காய் வாங்கும் போது, மட்டும் பிளாஸ்டிக் பேக்கின் ஒரு பகுதியை அகற்றி கையை வெளியே விட்டு வாங்குகிறார். காசு கொடுப்பதும் இதேபோலத் தான். அதுவும் சில நொடிகள் தான் கையை இப்படி வெளியே வைத்துள்ளார். பொருளை வாங்கியதும் பட்டென அவர் கையை உள்ளே இழுத்துக் கொள்கிறார். சில்லறை கூட சரியாக வாங்கினாரா எனத் தெரியவில்லை. இப்படிச் செய்து பொருட்களை வாங்கும் அந்த தம்பதி, அதன் பின்னர் வழக்கம் போல அங்கிருந்த நகர்கின்றனர்.

வியந்த மக்கள்
இந்த தம்பதி இப்படிச் செல்வதைப் பார்த்து அங்கிருந்த நபர்களே வியந்து போய்விட்டனர். அதிலும் அந்த வீடியோவில் கடைசியாக வரும் ஒருவர் "யாருடா இவங்க" என்ற ரேஞ்சில் இந்தத் தம்பதியைத் தெளிவாகத் தெரிகிறது. அந்த நபரை மட்டுமின்றி வீடியோ பார்க்கும் நம் அனைவரையும் இந்த வீடியோ நிச்சயம் ஆச்சரியப்படுத்தவே செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தளவுக்கு டிப்டாப்பாக உடலுக்கே மாஸ்க் போட்டு வந்து மிரள வைத்துள்ளனர் இந்த ஜோடி.. சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி இந்த வீடியோ இணையத்தில் முதலில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நெட்டிசன்கள்
இந்த தம்பதியின் இந்த ஐடியாவை பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் இவர்கள் கடைப்பிடிக்கும் முறை பெரியளவில் வைரஸ் பாதிப்பைத் தடுக்காது என்பதே உண்மை. ஏனென்றால், ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும், அந்த பெண் கைகளை வெளியே நீட்டுகிறார். அதன் பிறகு அவர்கள் சானிடைஸர் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்துவதாகத் தெரியவில்லை என்றும் கூட நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா
சீனாவில் இப்போது மிக மோசமான ஒரு சூழல் நிலவி வருகிறது. எங்குப் பார்த்தாலும் கொரோனா பாதிப்பு தான் தாண்டவமாடுகிறது. அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. தினசரி பாதிப்பு பல லட்சத்தை எட்டியுள்ளதால், தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களையே அந்நாட்டு அரசு வெளியிடுவதை நிறுத்திக் கொண்டுள்ளது. அந்தளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.












Click it and Unblock the Notifications