குறுக்கே என்ன வந்தாலும் நொடியில் பஸ்பம்.. எரிமலை போல வெடிக்கும் சீனாவின் புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு!
பெய்ஜிங்: ராணுவ தொழில்நுட்பத்தில் உலகின் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே சீன ஆய்வாளர்கள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட வெடிகுண்டை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளன. இது வழக்கமான TNT வெடிகுண்டை விட 15 மடங்கு சக்திவாய்ந்ததாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட வெடிகுண்டை உருவாக்கியுள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது அணுசக்தி திறன் கொண்டது இல்லை. அதாவது இதுவரை உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் வெடிகுண்டு எல்லாமே பேரழிவை ஏற்படுத்தும் அணுசக்தி திறன் கொண்ட வெடிகுண்டாகவே இருந்த நிலையில், இது அணுசக்தி இல்லாத அதாவது non-nuclear explosiveஆக இருக்கிறது.

15 மடங்கு சக்திவாய்ந்தது
இந்த வெடிகுண்டு வெடித்தபோது சுமார் இரண்டு வினாடிகளுக்கு மேல் வெள்ளை நிறச் சூடான தீப்பிழம்பு கிளம்பியதாகக் கூறப்படுகிறது. இரண்டு கிலோ வெடிகுண்டை வெடிக்க வைத்தபோதே இந்தளவுக்கு அது வெடித்துச் சிதறியிருக்கிறது. இது TNT வெடிகுண்டை விட 15 மடங்கு சக்திவாய்ந்தது ஆகும். எந்த அணுசக்தி பொருளும் இல்லாத போதிலும் இது வெடித்தபோது வெப்பம் 1,000 டிகிரி செல்சியஸை எட்டியதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
சீனா அரசு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனமான சிஎஸ்எஸ்சி நிறுவனத்தின் 705 ஆராய்ச்சி பிரிவு இந்த வெடிகுண்டை உருவாக்கியுள்ளது. இது மெக்னீசியம் அடிப்படையிலான திட நிலை ஹைட்ரஜன் அடிப்படையிலான வெடிபொருளாகும். மின்சார சப்ளை இல்லாத இடங்களுக்கும் எளிதாக உள்ளூரிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என க்ளீன் எனர்ஜியை உற்பத்தி செய்யவே இதை முதலில் உருவாக்கியுள்ளனர்.
சீன ஆய்விதழ்
இந்தக் கண்டுபிடிப்பு சீன மொழியில் வெளியாகும் பிரபல ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. வெடிக்கும் சாதனத்தில் இருக்கும் சில்வர் நிற பொடி, அதாவது மெக்னீசியம் ஹைட்ரைடு, வெடிபொருட்களால் ஆக்டிவேட் செய்யப்படும்போது அது விரைவான வெப்பச் சிதைவுக்கு உட்படுகிறது. அப்போது அது ஹைட்ரஜன் வாயுவை வெளியிடுகிறது.. அது ஒரு மிகப் பெரிய தீப்பிழம்பை உருவாக்குகிறது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "ஹைட்ரஜன் வாயு குண்டைக் குறைந்தபட்ச ஆற்றலுடன் பற்றவைக்கும்போது அது மிகப் பெரிய வெடிப்பை உருவாக்குகிறது. அது வெளிப்புறமாகப் பெரிய தீப்பிழம்புகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அதேநேரம் சரியான கலவை மூலம் வெடிப்பு தீவிரத்தை நம்மால் துல்லியமாகக் கட்டுப்படுத்த முடிகிறது. மிக பெரிய டார்கெட்களை சீரான முறையில் அழிக்க உதவுகிறது" என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதிக நொடிகள்
பொதுவாக ஒரு டிஎன்டி வெடிகுண்டு வெடிக்கும்போது அது 0.12 நொடிகள் மட்டுமே நீடிக்கும். அதேநேரம் இந்த புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு சுமார் 2 வினாடிகள் வரை நீடிக்கும். இந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு வெடிக்கும்போது உருவாகும் வெப்பம் என்பது அலுமினிய உலோகக் கலவைகளையே உருக்கும் அளவுக்கு வலிமையானதாகும்.
சீன ஆய்வாளர்கள் இந்த வெடிகுண்டைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வெடித்து சோதனை செய்துள்ளனர். TNTயின் வெடிப்பு சக்தியில் 40 சதவீதத்தை மட்டுமே வழங்கியபோதிலும், வெப்பத்தால் அதீதச் சேதம் ஏற்பட்டுள்ளது. இது ராணுவத்தில் வேறு எதற்கெல்லாம் பயன்படும் என்பது குறித்தும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
உலக நாடுகள் அச்சம்
அதேநேரம் இந்த புதிய வெடிகுண்டு உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே சீனா உலகின் பல்வேறு நாடுகள் உடனும் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இந்த வெடிகுண்டைச் சீன ராணுவம் எப்படிப் பயன்படுத்தும் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications