சீனாக்காரன் சீனாக்காரன் தான்யா.. முள்ளே இல்லாத மீனை உருவாக்கிய ஆய்வாளர்கள்.. அது எப்படி சாத்தியம்?
பெய்ஜிங்: நம்மில் பலருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் ஒன்று மீன். ஆனாலும், மீனில் இருக்கும் முடிகள் காரணமாகவே பலரும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள். இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்கு ஒரு தீர்வை உருவாக்கிவிட்டனர். அதாவது முள் இல்லாத மீனைச் சீன ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த வகை மீன்களில் உள்ள சிறப்பம்சம் என்ன. இவை ஏன் முக்கியமானது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அசைவ உணவுகளில் மீன்களின் சுவை எப்போதுமே தனித்துவமானது. ஆனாலும், மீன்களில் இருக்கும் முட்களுக்குப் பயந்தே பலரும் அதை யோசித்து யோசித்தே சாப்பிடுவார்கள். மீன்களில் முட்கள் பெரிய பிரச்சினையாகவே இருக்கும். இதற்கிடையே அந்தப் பிரச்சினைக்கும் சீன ஆய்வாளர்கள் இப்போது ஒரு தீர்வை கண்டுபிடித்துவிட்டனர்.

மீன்கள்
பல ஆண்டு தீவிர ஆய்வுக்குப் பிறகு முள் இல்லாத ஒரு வகை மீனைச் சீன ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதற்கு 'சோங்கே எண் 6' (Zhongke No. 6) என்று பெயரிட்டுள்ளனர். சீனாவின் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக இந்த வகை மீன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசியா முழுவதும் பரவலாகச் சாப்பிடப்படும் பிரஷ்யன் கெண்டை மீன் வகையைச் சேர்ந்த இது, சதைப்பகுதியில் உள்ள சிறிய எலும்புகளை நீக்க மரபணு திருத்தும் (Gene editing) செய்யப்பட்டு, அதற்கேற்ப உருவாக்கப்பட்டது..
எப்படி
சீன அறிவியல் அகாடமி (CAS) விஞ்ஞானி குய் ஜியான்ஃபாங் தலைமையிலான டீம் இந்த மீனை உருவாக்கியது.. கெண்டை மீன்களில் Y-வடிவ தசைநார் எலும்புகள் உருவாக்க runx2b என்ற மரபணுவே காரணமாக இருக்கிறது. அந்த மரபணுவை மீன்களின் கரு நிலையிலேயே CRISPR-Cas9 கருவிகள் மூலம் ஜீன் எடிட்டிங் செய்து வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்தனர்.
இந்த மரபணு செயலிழப்பால், மீன் இயல்பான எலும்பு அமைப்பைப் பெறும் அதே வேளையில், அதன் சதைப்பகுதியில் நுண்ணிய எலும்புகள் இன்றி வளரும். கெண்டை மீன்களில் பொதுவாக 80க்கும் மேற்பட்ட தசைநார் எலும்புகள் இருப்பதால், இவை தொண்டையில் அடைப்பு ஆபத்தை உருவாக்குகிறது. இதனால் மீனைச் சாப்பிடுவோருக்கும் அது பெரும் சிரமத்தையும் ஏற்படுத்துகின்றன. அதற்கு மாற்றாகவே இந்த புதிய வகைக் கெண்டை மீனை உருவாக்கியுள்ளனர்.
ஏன் முக்கியம்
இந்த முள்ளில்லா கெண்டை மீன் உண்பதற்கு எளிதானது. மேலும், வணிக ரீதியான மீன் வளர்ப்புக்காகவும் இது மேம்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான கெண்டை மீனை விட 'சோங்கே எண் 6' மீன்கள் வேகமாக வளர்கின்றன.. குறைந்த தீவனம் போதும்.. அதிக நோயெதிர்ப்பு சக்தியுடன் வேகமாக வளரும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்துடன் அதிக மீன்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சீனாவின் CAS திட்டத்தின் கீழ் இந்த மீனை உருவாக்கியுள்ளனர். சுமார் ஆறு ஆண்டு ஆய்வுக்கு பிறகே இந்த மீனை உருவாக்கியுள்ளனர். இத்திட்டம் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது, வளர்ப்புச் செலவுகளைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும்.
வரும் காலத்தில் புதிய ஆய்வுகள்
இது மிகப் பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது. அதேநேரம் இந்த ஆய்வு இத்தோடு நின்றுவிடாது.. வரும் காலத்தில் வேறு பல நன்னீர் மீன் இனங்களிலும் இதேபோன்ற மரபணு மாற்றங்களைச் செய்து, முள் இல்லாத வேகமாக வளர்க்கக்கூடிய மீன்களை ஆய்வாளர்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தேவையான சோதனைகளுக்குப் பிறகு முள் இல்லாத இந்தக் கெண்டை மீன்கள், வரும் ஆண்டுகளில் சந்தையில் நுழையும். மீன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியை அதிகரிக்கவும் இவை உதவும் எனச் சீன ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications