Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்க சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. அதாவது கடலுக்கு அடியில் தங்கம் இருக்க கூடிய டெபாசிட் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இனி அங்கே சுரங்கம் தோண்டி சீனா தங்கம் எடுக்கும்.

இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா கூறி உள்ளது.

யான்டாய் நகர அரசாங்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் கடலுக்கடியில் உள்ள இந்த தங்க இருப்பை கண்டுபிடித்தது. ஆய்வுகள் மூலம் இங்கு 562 டன் உறுதிப்படுத்தப்பட்ட தங்க இருப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இங்கு ஒரு டன் தாதுவுக்கு சராசரியாக 4.2 கிராம் தங்கம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

gold rate silver investment

சீனா தங்கம்

இதன் மூலம், சீனாவின் லைஜோ கடலின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட தங்க இருப்பு 3,900 டன்களைத் தாண்டியுள்ளது. இது சீனாவின் மொத்த தங்க இருப்புகளில் சுமார் 26 சதவீதமாக உள்ளது.

கடலுக்கு அடியில் 2,000 மீட்டர் ஆழத்தில் இருந்து தங்கம் பிரித்தெடுக்க, அதிகாரிகள் 10 பில்லியன் யுவான் (தோராயமாக $1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டை அறிவித்துள்ளனர். நாளொன்றுக்கு 12,000 டன் தாதுவைச் பிரித்தெடுக்கும் திறன் கொண்ட நவீன கடல்சார் சுரங்க வசதி அமைக்கப்படவுள்ளது. இது செயல்படத் தொடங்கியதும், இந்தச் சுரங்கம் ஆண்டுக்கு சுமார் 15 டன் தங்கத்தை உற்பத்தி செய்யும். இது சீனாவின் உள்நாட்டுத் தங்க விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தி, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனா தங்கம் உற்பத்தி

இந்த கடல்சார் கண்டுபிடிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல பெரிய உள்நாட்டு தங்கக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து வந்துள்ளது. லியாவோனிங் மாகாணத்தில் 1,440 டன்களுக்கு அதிகமான தங்கம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் சின்ஜியாங் அருகே உள்ள குன்லுன் மலைகளில் 1,000 டன்களுக்கு மேல் மதிப்பிடப்பட்ட தங்கம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் சர்வதேச தங்கச் சந்தையில் சீனா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இது எதிர்காலத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு சவால் விடலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் டோர்ஸ்டன் ஸ்லோக், மத்திய வங்கிகளின் கொள்முதல், ஆர்பிட்ரேஜ் வர்த்தகம், சீனக் குடும்பங்களின் அதிகரித்த தேவை போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்வில் சீனா முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்காவின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் காலியாகும், என்றுள்ளார்.

டாலர் மொத்தமாக அழியும் - தங்கம்

இதனால் டாலருக்கு பெரிய சிக்கல் ஏற்படும். டாலர் மொத்தமாக அழியும் நிலையம் ஏற்படலாம். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் விரைவில் அமெரிக்க டாலரை விட அதிக தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கலாம். தற்போது டாலர் தான் முக்கிய உலகளாவிய இருப்பு நாணயமாக உள்ளது.. அது மாறும் நிலை ஏற்படலாம் என்றும் ஸ்லோக் விளக்கினார். தங்கச் சந்தையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்த எச்சரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஸ்ப்ராட் அசெட் மேனேஜ்மென்ட்டின் ETF தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் ஸ்டீவ் ஸ்காஃப்ஸ்டால், உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக தங்கத்தைப் பார்க்கின்றன அரசாங்கங்களும் மக்களும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார அபாயங்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க தங்கத்தை ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. 2022 முதல் சீனா தனது மத்திய வங்கியில் அதிக அளவிலான தங்கத்தை தொடர்ந்து வாங்கி வருகிறது. இது உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்து அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம், என்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+