அமெரிக்க வரிக்கு எதிராக சண்டை.. ஆசியாவின் கை ஓங்குகிறதா? கவனம் பெற்ற சீனாவின் ராஜதந்திரம்
பெய்ஜிங்: அமெரிக்காவின் வரிக்கு எதிராக கடைசி வரை உறுதியுடன் நின்றதால் சீனா சர்வதேச அளவில் புது கவனம் பெற்றிருக்கிறது. இறுதியாக டிரம்ப் வரி குறைப்புக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்காக சீனா மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் பேசுபொருளாகியுள்ளன.
ராணுவ பலத்தில் அசுரத்தனமாக இருக்கும் அமெரிக்கா, தனது பொருளாதார பலத்தையும் காட்ட சீனாவை டார்கெட் வைத்தது. இதற்காக கையில் எடுக்கப்பட்ட ஆயுதம்தான் பரஸ்பர வரி.

தொடக்கத்தில் கனடா, பிரிட்டன், ஜப்பான் என தனது நட்பு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு இந்த வரியை டிரம்ப் போட்டார். ஆனால், வரியை வாபஸ் வாங்கிய டிரம்ப், சீனா மீதான வரியை மட்டும் திரும்பப்பெறவே இல்லை. இது சர்வதேச அளவில் வர்த்தக போராக வெடித்தது. பல நாட்களுக்கு பிறகு தற்போது இந்த வரியை டிரம்ப் வாபஸ் பெற்றிருக்கிறார். இதற்கு சீனாவின் சிறந்த ராஜதந்திர நடவடிக்கை காரணமாக சொல்லப்படுகிறது.
சீனா கொடுத்த முதல் பதிலடி, போயிங் நிறுவனத்துடனான வர்த்தகத்தை துண்டித்ததுதான். இது அமெரிக்காவுக்கு பெரிய அடியாக இருந்தது. உலகின் மிகப்பெரிய விமான சேவையை சீனா கொண்டிருக்கிறது. சின்ன சின்ன ஊர்களில் கூட விமான சேவை இருக்கிறது. எனவே விமானங்களுக்கான டிமான்ட் அதிகமாக இருந்தது. விமானங்களை பெரும்பாலும் போயிங் நிறுவனம்தான் உருவாக்கி கொடுத்தது. Boeing 737 MAX மற்றும் Boeing 787 Dreamliner போன்ற விமானங்கள் சீனாவால் அதிக அளவில் வாங்கப்பட்டு வந்தன.
டிரம்ப்பின் வரி காரணமாக போயிங் விமானங்களை சீனா வாங்கவில்லை. ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தையும் கூட சீனா ரத்து செய்தது. விமானம் தயாரிப்பு ஒன்னும் லேசுப்பட்ட காரியம் கிடையாது. பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து செய்யப்பட்ட விமானங்கள் விற்காமல் போனாதால் போயிங் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டது. அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திற்கு பதில், ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்தை சீனா நாடியது.
அதேபோல ரேர் எர்த் மெட்டீரியல் எனப்படும் அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்வதையும் சீனா நிறுத்தியது. ஸ்மார்ட்போன்கள் தொடங்கி, எலெக்ட்ரிக் வாகனங்கள், கணினிகள், ரோபோட்டிக்ஸ், ராணுவ உபகரணங்களை தயாரிக்க இந்த கனிமங்கள் அவசியம். இது கிடைக்காமல் போனதால் அமெரிக்கா திணறியது. உலகம் முழுவதும் கிடைக்கும் அரிய வகை கனிமங்களில் 60-70% சீனாவில்தான் கிடைக்கிறது. மிகச்சரியாக சொல்வதெனில் உலகின் பல பகுதிகளில் இந்த கனிமங்கள் கிடைத்தாலும் கூட, அதை வெட்டி எடுக்கும் தொழில்நுட்பம் சீனாவிடம்தான் இருக்கிறது.
அதேபோல அமெரிக்காவிலிருந்து சிஎன்ஜி எரிபொருளை வாங்குவதை சீனா குறைத்தது. இது நேரடியாக அடி. பல பில்லியன் டாலர் இழப்புகளை சிஎன்ஜி நிறுவனங்கள் எதிர்கொண்டன. இப்படி சீனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் டிரம்ப்பை வறுத்தெடுக்க தொடங்கின.
இதுபோக மருந்து, விவசாய பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தியது, கூகுள், பேஸ்புக், x தளம், யூடியூப் உள்ளிட்டவற்றை தடை செய்தது ஆகியவையும் அமெரிக்காவை கடுமையாக பாதித்தது. மேலும் FedEx, UPS போன்ற அமெரிக்க லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இது எல்லாம் சீனா மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆசியா கண்டத்தில் அமெரிக்காவை எதிர்த்து சண்டை செய்த ஒரே நாடு சீனாதான். இதில் அந்நாடு வெற்றியும் பெற்றிருப்பதால் சீனா மீதான மவுசு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications