எங்க கிட்டயேவா.. ஜப்பானின் ராணுவ ரகசியங்களை கைப்பற்றிய சீனா.. ஹேக்கிங் மூலம் அட்டகாசம்.. போச்சு
பெய்ஜிங்: ஜப்பானின் பாதுகாப்பு துறை ஆவணங்களை இணையம் மூலம் சீனா ஹேக் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானின் சில முக்கியமான ரகசியங்களை சீனா இதன் மூலம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானுக்கும் - சீனாவிற்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் உள்ளது. ஜப்பான் அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பது இந்த மோதலுக்கு முதல் காரணம். அடுத்தடுத்தாக ஜப்பான் கடலிலும் தென் சீன கடலிலும் சீனாவின் ஆக்கிரமிப்புகளை ஜப்பான் எதிர்த்து வருகிறது. தென் சீன கடல் எல்லை கடந்த 10 வருடங்களாக மோதல் உச்சத்தில் உள்ளது. இங்கே அமெரிக்கா - சீனா இடையிலான கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் அங்கு நடக்கும் மோதலுக்கு காரணம் ஆகும். அங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய்க்கு யார் சொந்தம் கொண்டாடுவது என்று போட்டி நிலவி வருகிறது.இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. இந்த கடல் பகுதி மொத்தமும் தனக்கு சொந்தம் என்று சீனா கூறி வருகிறது.
அதே சமயம் சீனாவிற்கு எதிராக இதே கடல் எல்லையில் இருக்கும் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் முஷ்டி முறுக்கி வருகின்றன. இங்கு சீனா சின்ன சின்னதாக தீவுகளை அமைத்து வருகிறது. அங்கு ராணுவத்தை சீனா குவித்து வருகிறது
இன்னொரு மோதல்: இதெல்லாம் போக இன்னொரு பக்கம் குஷிமா அணு மின் நிலைய நீரை ஜப்பான் கடலில் வெளியேற்றுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சுனாமி காரணமாக விபத்துக்கு உள்ளாகி செயல் இழந்த புகுஷிமா அணு உலையில் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் உள்ளது. அங்கே உள்ளே அணு ரியாக்டர் கோரை குளுமைப்படுத்த இப்போதும் நீர் பயன்படுத்தப்படுகிறது . இந்த நீர் அங்கே உள்ள சேமிப்பு டேங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 2019 நிலவரப்படி, இந்த அணு ஆலை பகுதியில் 1.17 மில்லியன் கன மீட்டர் அளவிலான அணு மாசு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் காலம் முழுக்க இப்படி சேமிக்க முடியாது.
இதனால் இதை சுத்தம் செய்து கடலில் வெளியிட ஜப்பான் அரசு செய்துள்ளது. முடிவு ஜப்பானிய விதிமுறைகள்படி இந்த நீரை கடலுக்கு வெளியேற்ற அனுமதிக்கும் அளவிற்கு இதை சுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இந்த விவகாரம் சீனாவை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஜப்பான் இந்த நீரை வெளியேற்ற கூடாது என்பதில் சீனா தீர்க்கமாக இருக்கிறது. ஏனென்றால் அந்த கடல் பகுதியை சீனாவும் பகிர்ந்து கொள்கிறது. சீனாவின் கடல் வளம், மீன்பிடிப்பு, சுற்றுலா, இயற்கை வளம் என்று பல விஷயங்கள் இதனால் பாதிக்கப்படும் என்றுள்ளது.
ஜப்பான் அமெரிக்கா: அதேபோல் ஜப்பான் அமெரிக்கா இன்னொரு பக்கம் ராணுவ ரீதியாக நெருங்கி வருவதையும் சீனா விரும்பவில்லை. இவை எல்லாம் ஜப்பான் - சீனா இடையிலான மோதலுக்கு காரணம் ஆகும். இந்த நிலையில்தான் ஜப்பானின் பாதுகாப்பு துறை ஆவணங்களை இணையம் மூலம் சீனா ஹேக் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானின் சில முக்கியமான ரகசியங்களை சீனா இதன் மூலம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2020லேயே இந்த ஹேக்கிங் நடந்து உள்ளதாம். அதோடு இந்த ஹேக்கிங்கில் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் தொடர்பாக அதன் நட்பு நாடான ஜப்பானிடம் இருந்த முக்கிய விவகாரங்களையும் சீனா கைப்பற்றி உள்ளதாம். ஜப்பான் சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் இந்த தகவல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அமெரிக்கா, ஜப்பானின் ராணுவ ரகசியங்கள், அவர்களின் தளவாடங்கள், பல்வேறு திட்டங்கள், குறைகளை சீனா தெரிந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகளில் கூறப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications