5ஜி எல்லாம் இனி வேஸ்ட்.. மிரட்டும் சீனாவின் 10ஜி.! 4 படங்களை ஒரே நொடியில் டவுன்லோடு செய்யலாம்
பெய்ஜிங்: அதிவேக இணையம் என்பது இப்போது கிட்டத்தட்ட அடிப்படை விஷயமாகிவிட்டது. இதனால் உலகின் டாப் நிறுவனங்களும் அதிவேக இணையச் சேவையில் போட்டி போட்டு வருகிறது. இதற்கிடையே உலக நாடுகளைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் சீனா இப்போது நம்ப முடியாத இணைய வேகத்தில் 10 ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகை வியக்கவைப்பதாக உள்ளது.
நமது உலகில் இணையம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இப்போது டேட்டிங் முதல் ஷாப்பிங் வரை அனைத்திற்குமே இணையம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இணைய வசதி காரணமாக உலகமே உள்ளங்கைக்கு வந்துவிட்டது என நாம் யோசிக்காமல் சொல்லலாம்.

10ஜி வேகம்
இப்போது இந்தியா உட்பட உலகெங்கும் 5ஜி சேவை கிடைக்கிறது. இந்த 5ஜி வேகமாகப் பல நேரங்களில் நமக்கு மோசமானதாக இருக்கிறது. விஆர் போன்ற விஷயங்களுக்கு 5ஜி வேகத்திலான இணையச் சேவை தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது. இதற்கிடையே ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியப்படுத்தும் சீனா இப்போது 10ஜி சேவையைக் கொண்டு வந்துள்ளது.
சீன டெலிகாம் நிறுவனம்
சீனாவின் ஹூவாவே நிறுவனம் சீன யூனிகாம் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த பிராட்பேண்ட் நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாகச் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சுனான் கவுண்டி என்ற பகுதியில் இந்த 10ஜி இணையச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இணைய உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அதிவேக 10ஜி நெட்வொர்க் அதிநவீன 50G PON (Passive Optical Network) தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்பில் செய்யப்பட்டுள்ள மேம்படுத்தல் இதில் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக லேடன்சி மிகக் குறைவாகச் சில மில்லி வினாடிகளே இருக்கும். அதாவது டேட்டா நமது சிஸ்டத்தில் இருந்து டவருக்கு சென்று மீண்டும் நமது சிஸ்டத்திற்கு திரும்ப ஆகும் நேரமே லேடன்சி எனப்படும். இந்த 10ஜி லேடன்சியை ஒரு சில மில்லி விநாடிகளாகக் குறைக்கும். இதுவே இணைய வேகம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

நொடியில் 4 படம் டவுன்லோடு செய்யலாம்
இதனால் இந்த 10ஜி இணையச் சேவையில் 10 ஜிபி வேகத்தில் இணையம் கிடைக்கும். ரியல் உலக டெஸ்டிங்கில் இதில் கிட்டத்தட்ட 9,834 Mbps அதாவது நொடிக்கு 9.8 ஜிபி வேகத்தில் இணையம் கிடைக்கிறது. அதாவது அவர்கள் சொன்னதுபோல கிட்டத்தட்ட 10 ஜிபி வேகத்தை ரியல் உலகிலும் எட்டுகிறது. இதன் மூலம் சராசரியாக 2.5 ஜிபி சைஸில் உள்ள 4 தமிழ் படங்களை ஒரே நொடியில் டவுன்லோடு செய்ய முடியும். 4 அதேபோல அப்லோடை பொறுத்தவரை அது 1,008 Mbps அதாவது கிட்டத்தட்ட நொடிக்கு 10 ஜிபிக்கு மேலான வேகத்தில் அப்லோடு வேகம் இருக்கிறது.
சீன அரசு
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் தீவிரமாக வருகிறது. சீனாவின் பல்வேறு பொருட்கள் மீதும் அமெரிக்கா ஏகப்பட்ட வரிகளை விதித்து வருகிறது. இந்தச் சூழலில் ஹவாவே நிறுவனத்தின் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டிரம்ப் முதல்முறையாக அதிபராக இருந்த போது, கடந்த 2018ல் ஹீவாவே நிறுவனத்திற்கு அமெரிக்காவில் தடை விதித்திருந்தார். தகவல் திருட்டு அச்சம் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த 10ஜி தொழில்நுட்பத்திற்கும் கூட பல நாடுகள் தடை விதிக்கும் என்றே தெரிகிறது. ஏனென்றால் சீன யூனிகாம் என்பது சீனா அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும். அதாவது 10ஜி தொழில்நுட்பத்தில் சீன அரசின் பங்கும் இருக்கிறது. இதனால் தகவல் திருட்டு தொடர்பான அச்சமும் பலருக்கும் எழுந்துள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications