கைவிட்ட சீன மருந்துகள்! அமெரிக்க வேக்சின் பக்கம் திரும்பிய சீனா.. கையை பிசையும் ஜின்பிங் அரசு

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் திணறிய சீன மருத்துவர்கள், இப்போது அமெரிக்க மருந்து பக்கம் திரும்பியுள்ளனர்.

சீன இப்போது மிக மோசமான ஒரு வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் கூட அங்கு வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு ஏற்படவில்லை. ஒட்டுமொத்த உலகமே கொரோனாவில் திணறிய போதும், சீனா நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தது.

ஆனால், இப்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடமில்லாத நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸிலேயே இருக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது.

 தீவிர பாதிப்பு

தீவிர பாதிப்பு

அதிலும் தீவிர பாதிப்பால் ஏற்படும் நிமோனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளனர். மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனா வேக்சின் பணிகளைச் சிறப்பாகவே மேற்கொண்டன. ஆனாலும், வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் சீனா அதிக தடுப்பாற்றலை கொண்ட அமெரிக்க வேக்சின்களுக்கு அனுமதியளிக்கவில்லை. அங்கு சினோவாக் மற்றும் சினோபார்ம் வேக்சினை கொண்டே தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 தடுப்பாற்றல் குறைவு

தடுப்பாற்றல் குறைவு

பிரேசிலில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆய்வில் சினவாக் தடுப்பூசிக்கு வெறும் 51% தடுப்பாற்றல் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. சீனாவின் மற்றொரு வேக்சினான சினோபார்ம் தடுப்பூசிக்கு 67-77% வரை தடுப்பாற்றல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மற்ற வேக்சின்கள், குறிப்பாக அமெரிக்க வேக்சின்களுடன் ஒப்பிடும்போது ரொம்பவே குறைவு. அங்குத் தீவிர வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிக தடுப்பாற்றலை கொண்ட வேக்சின்களை பயன்படுத்திய நாடுகளில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாததை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

 அமெரிக்க மருந்துகள்

அமெரிக்க மருந்துகள்

சீனாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு அமெரிக்க வேக்சின்கள் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாகத் தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது. இதனால் பெய்ஜிங் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தான பாக்ஸ்லோவைடை விரைவில் விநியோகம் தொடங்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான கொரோனா அலை ஏற்பட்டுள்ள நிலையில், அதை ஓரளவுக்கு சாமாக்க இது உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 விரைவில் விநியோகம்

விரைவில் விநியோகம்

அங்கு முதலில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பைசர் மருந்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த சிறிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் பிறகு அந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்தை வழங்குவார்கள். மேலும், அந்த மருந்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய தகவலை வழங்குவார்கள். இத்தகவலை அங்குள்ள பல சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும், அந்த மருந்து எப்போது சீனாவில் விநியோகிக்கப்படும் என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் இல்லை.

 பாதிப்பைக் குறைக்கும்

பாதிப்பைக் குறைக்கும்

சீனாவில் இதுவரை கொரோனா சிகிச்சைக்கு அனுமதியளிக்கப்பட்ட ஒரே மருந்தாக பைசரின் பாக்ஸ்லோவைட் உள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள பாக்ஸ்லோவைட் கொரோனா தடுப்பு மருந்து இல்லை. மாறாகச் சிகிச்சையின் போது அளிக்கப்படும் மருந்தாகும். அதாவது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையின் போது இது அளிக்கப்படும். கொரோனா அறிகுறிகள் தெரியத் தொடங்கிய 5 நாட்களில் இந்த மருந்தை எடுத்துக் கொண்டால், தீவிர பாதிப்பு ஏற்படுவது 88% குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 திணறும் பெய்ஜிங்

திணறும் பெய்ஜிங்

தலைநகர் பெய்ஜிங் இப்போது கொரோனா பாதிப்பால் திணறி வருகிறது. குறிப்பாக, மோசமான தீவிர பாதிப்பு அங்கு அதிகம் ஏற்படுகிறது. அங்குத் தீவிர பாதிப்பு அதிகம் ஏற்படும் நிலையில், பாக்ஸ்லோவைட் வேக்சின் தீவிர பாதிப்பு ஏற்படுவதை இது ஓரளவுக்குத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைசரின் இந்த பாக்ஸ்லோவைட் மருந்திற்குக் கடந்த பிப். மாதம் அனுமதியளித்திருந்தது. இப்போது கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் அதற்கான விற்பனைக்கு அனுமதியளித்திருந்தது.

 என்ன காரணம்

என்ன காரணம்

சீனாவில் இத்தனை காலம் ஜீரோ கோவிட் பாலிசி அமலில் இருந்தது. இருப்பினும், இந்த கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகச் சீன மக்கள் போராட்டம் நடத்தினர். அரசுக்கு அழுத்தம் தொடர்ந்து அதிகரிக்கவே, வேறு வழியில்லாமல் அனைத்து கட்டுப்பாடுகளையும் அகற்றியது. இப்படி ஒரே நேரத்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதே, வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு வேகமாகப் பரவ முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+