சினிமா ஸ்டார்களுக்கு சீனா வைத்த ஆப்பு!
பீஜிங்: சினிமா நட்சத்திரங்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை சீன அரசு கொண்டு வந்துள்ளது. வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை சீன அரசு எடுத்துள்ளது.
இரட்டை ஒப்பந்தங்கள் மூலமாக அதிக தொகையை சினிமாவில் சம்பாதிப்பதை தடுக்க இந்த புதிய விதிமுறை வழி செய்யும்.
சினிமா செலவில் மொத்தத்தில் 40 சதவீதத்துக்கும் மிகாமல் ஸ்டார்களின் சம்பளம் இருக்க வேண்டும் என்று சீன அரசு புதிய விதிமுறையில் தெரிவித்துள்ளது.

70 சதவீதம் உள்ளே
மொத்த கூலி தொகையில் ஸ்டார்களின் சம்பளம் 70 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் புதிய விதிமுறை சொல்கிரது. சீனாவில் இருவகையான ஒப்பந்த நடைமுறை உள்ளது. நட்சத்திரங்கள், ஒரு ஒப்பந்தத்தை அரசாங்கத்திற்கு காட்டுவதற்காக போட்டுக்கொள்கிறார்கள். மற்றொரு ஒப்பந்தத்தை தயாரிப்பாளர்களுடன் போட்டுக்கொள்கிறார்கள்.

அம்பலமான முறைகேடு
சமீபத்தில் டிவி சேனல் பிரசென்டர் சுயி யோங்யுவான் மற்றும் நடிகை பேன் பிங்பிங் ஆகியோர் நடுவே ஏற்பட்ட மோதலையடுத்து, நடிகை 2 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதை ஆதாரத்தோடு, சோஷியல் தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுக்க கவனத்தை ஈர்த்தது. எனவே சீன அரசு தற்போது இந்த கெடுபிடிகளை கையாளுகிறது.

நடிகர்களை நடிகர்களாக பாருங்கள்
நடிகர்களை கடவுள் போல கொண்டாடும் மனநிலை மாற வேண்டும் என்று கூறியுள்ள சீன அரசு, ஸ்டார்கள் பின்னால் ஓடுவதை மீடியாக்கள் நிறுத்திக்கொண்டு, நாட்டின் கலை, கலாசார செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும்படி அட்வைஸ் செய்துள்ளது.

உலகமே இப்படித்தான் பாஸ்
ஆக மொத்தத்தில், தமிழர்கள்தான் ஏதோ சினிமா ஸ்டார்கள் பின்னால் ஓடுவதை போன்ற மாய தோற்றத்தை நம்ப வேண்டாம். முன்னேறிய நாடான சீனாவின் நிலைமையும் அதுதான்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications