டாய்லெட் பேப்பரில் டொனால்ட் டிரம்ப் படம்.. சர்ச்சை பேச்சுக்கு 'பின்விளைவு' காட்டும் சீனா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மீது சீனர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. டாய்லெட் பேப்பரில் டிரம்ப் போட்டோவை பிரிண்ட் செய்து அதை பயன்படுத்துவதன் மூலம், தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். இதனால் டிரம்ப் உருவம் பொரிக்கப்பட்ட டாய்லெட் பேப்பர்களுக்கு டிமாண்டோ, டிமாண்ட் நிலவுகிறதாம்.
அமெரிக்க தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் டொனால்ட் டிரம்ப், அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறார். இஸ்லாமியர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு கண்டன குரல்கள் எழுந்திருந்த நிலையில், சமீபத்தில் சீனா பற்றியும் சர்ச்சைக்குறிய கருத்தை கூறினார்.

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனா பறித்துவிட்டதாகவும், அமெரிக்காவின் பணத்தில்தான் சீனா வாழ்கிறது எந்றும் டிரம்ப் கூறியிருந்தார். இது சீனர்களை கோபப்படுத்தியன் விளைவுதான், மேற்கூறிய டாய்லெட் பேப்பர் ரிவெஞ்ச்.
சீனாவை சேர்ந்த அலிபாபா எனும் ஆன்லைன் போர்ட்டலில், 70க்கும் மேற்பட்ட சீன தயாரிப்பாளர்கள், டிரம்ப் புகைப்படத்துடன் கூடிய டாய்லெட் பேப்பரை விற்பனை செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் வசிக்கும் சீனர்கள், ஆன்லைனில் அதை வாங்கி, தங்கள் ஆத்திரத்தை டாய்லெட்டில் தீர்த்துக்கொள்கிறார்கள்.
சீனர்கள் மட்டுமில்லை, அமெரிக்காவை சேர்ந்தவர்களில் டிரம்ப்பை பிடிக்காத பிரிவினரும் இந்த டாய்லெட் பேப்பரை வைத்து பழி வாங்கிக்கொண்டுள்ளனர். அதில் ஒருவர்தான், அமெரிக்க மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனை சிட்னி லெரோக்ஸ்.
தனது கணவர் டிரம்ப் டாய்லெட் பேப்பரை வாங்கியுள்ளதாகவும், தனக்கு இது மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ள, சிட்னி லெரோக்ஸ் அந்த பேப்பர் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். டிரம்ப் எதிர்ப்பாளர்கள் செயல்பாடுகள் இன்னும் எங்கு சென்று நிற்குமோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications