நொறுங்கும் ரஷ்ய பொருளாதாரம்! சட்டென உள்ளே புகுந்த சீனா.. ரொம்ப தப்பு.. அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பொருளாதார தடைகள் ரஷ்யாவை கடுமையாக பாதித்துள்ள நிலையில் சீனா ரஷ்யாவிற்கு விரைவில் உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Russia-வுக்கு உதவினால் அவ்வளவு தான்! America எச்சரிக்கை | Oneindia Tamil

    ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல்வேறு மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. அதிலும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவையும் அமெரிக்கா கைவிட்டுள்ளது.

    இன்னொரு பக்கம் swift எனப்படும் சர்வதேச பணபரிமாற்ற மெசேஜிங் தளத்தில் இருந்தும் ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. அதோடு ரஷ்யாவின் பெரும்பாலான வங்கிகள் சர்வதேச பணப்பரிமாற்றம் செய்வதில் இருந்து தடை பெற்றுள்ளது.

    தடை

    தடை

    இதன் காரணமாக ரஷ்யாவின் டாலர் கையிருப்பு வங்கிகளில் முடங்கி உள்ளன. அதேபோல் ரஷ்யாவின் நகை கையிருப்பு வங்கிகளில் முடங்கி உள்ளன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்து கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக ரஷ்ய நிதி அமைச்சர் ஆண்டோவ் ராய்டர்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தாக்கு பிடிக்கிறோம்

    தாக்கு பிடிக்கிறோம்

    தற்போது பொருளாதார தடைகளுக்கு எதிராக நாங்கள் தாக்கு பிடித்துக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு சொந்தமாக 300 பில்லியன் டாலர் அந்நிய பண கையிருப்பு, தங்க நகை கையிருப்பு எல்லாம் முடக்கப்பட்டு உள்ளது. வங்கி தடை காரணமாக டாலர் கையொருப்பை வெளிய எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் பணமா யான் கையிருப்பும் எங்கள் நாட்டில் முடக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் நாங்கள் வர்த்தகம் செய்ய வேண்டும்.

    முடியவில்லை

    முடியவில்லை

    ஆனால் அதையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. எங்களுக்கும் சீனாவிற்கும் இடையில் இருக்கும் பொருளாதார உறவை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா எங்களுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். எங்களின் பொருளாதாரத்தை சரி செய்ய சீனா உதவ வேண்டும் என்று இவர் கோரிக்கை விடுத்தார்.

    சீனா ஆயுதம் '

    சீனா ஆயுதம் '

    அதோடு சீனாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் திட்டத்திலும் ரஷ்யா இருக்கிறது. உக்ரைன் போரால் ரஷ்யாவின் சிறிய ரக ஆயுதங்கள் பல தீர்ந்து போய் இருக்கின்றன. இதனால் போதிய ஆயுதங்கள் இன்றி ரஷ்யா கடுமையான பாதிப்புகளை அடைந்து உள்ளன. இந்த நிலையில்தான் சீனாவிடம் இருந்து ஆயுத உதவிகளை பெற்று உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. சீன அதிபர் ஜின் ஜிங்பிங்கும் ரஷ்யாவிற்கு உதவும் திட்டத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

     நடவடிக்கை

    நடவடிக்கை

    ஏனென்றால் ரஷ்யா - சீனா இடையே நோ லிமிட் உறவு எனப்படும் நெருங்கிய உறவு நிலவி வருகிறது. ஆனால் இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் இதுபற்றி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீனா ஒரு போதும் ரஷ்யாவிற்கு உதவி செய்ய நினைக்க கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஷ்யாவிற்கு உதவ சீனா முயல கூடாது.

    விளைவு

    விளைவு

    அப்படி செய்யும் பட்சத்தில் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அது தவறான முடிவாக இருக்கும். இதை பற்றி சீனாவிடம் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மீறி சீனா ஏதாவது உதவி செய்யும் பட்சத்தில் சீனா மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+