சீனாவில் எண்ணெய் குழாய் வெடித்து விபத்து: 44 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனாவின் கிழக்குப் பதியில் எண்ணெய் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் பலியாயினர். இந்த விபத்தில் 166 பேர் படுகாயமடைந்தனர்.
சினாவின் குங்டாவோ பகுதியில் நேற்று இரவு எண்ணெய் குழாய் ஒன்று வெடித்தது. இதில் அப் பகுதியில் இருந்த ஏராளமான பேர் உயிரிழந்தனர்.
அவ்வழியாக வந்த வாகனங்கள், அருகில் இருந்து வீடுகள் என பலவும் சேதமடைந்தன. எங்கு பார்த்தாலும் கரும் புகையாக காட்சி அளித்தது.
இவ்விபத்தில் மொத்தம் 44 பேர் பலியாகி இருக்கின்றனர். இதுவரை 166 பேர் படுகாயமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. சீனாவில் நிகழ்ந்த மிகக் கோரமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications