சீனத்து அண்ணாத்தே ஆடும் ஆட்டத்தை பாரீர்.. அடங்கப்பா.. தனுஷே மிரண்டு போய்டுவாரு!.. குத்து கெத்து!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில் அந்த பாடலுக்கு நம்ம சீனத்து பையன் தெறிக்கவிடும் அளவுக்கு ஆட்டம் போட்டுள்ளது வைரலாகி வருகிறது.

தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற படம் வெளியாகவுள்ளது. இதில் தனுஷ் ஒரு விசித்திரமான குரலில் ரகிட ரகிட ரகிட பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியான நிலையில் அது 10 மில்லியன் வியூயர்ஸுக்கு மேல் சென்றுவிட்டது. இந்த நிலையில் இந்த பாடலை சீனா பையன் நடனமாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் சீனா பையனின் ரகிட ரகிட சாலஞ்ஜுற்கு என்னால் முடிந்ததை நான் ஆடியுள்ளேன்.

தனுஷ்

தனுஷ்

கெத்து குத்து என கூறி தனுஷ், கார்த்தி சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் ஆகியோருக்கு டேக் செய்துள்ளார். அதில் தமிழ் பையனை போல் வேட்டி, சட்டையை போட்டுக் கொண்டு நாக்கை மடித்துக் கொண்டு செமையாக குத்தாட்டம் போடுகிறார் சீனாகாரர். என்னமா விதவிதமான லொகேஷன்களில் ஆட்டத்தை ஆடுகிறார். அதிலும் சோல்டர் மூவ்மென்ட்கள், ஹிப் மூவ்மென்ட்டுகள் எல்லாம் செம!

ரசிகர்

ரசிகர்

இதை பார்க்கும் போது சீனாகாரர்களுக்கு வெறும் நூடுல்ஸ் மட்டும்தான் சாப்பிட தெரியும்னு நீங்க நெனச்சா அது தவறு, நாங்கள் தமிழ் பேசி , தமிழ் பாடலுக்கு குத்தாட்டமும் போடுவோம்னு நமக்கு காட்டுவது போல் இருக்கும். இன்னோன்று தெரியுமா, இவர் கோலமாவு கோகிலாவின் ரசிகராம், அதாங்க நம்ம நயன்தாரா.

ஷர்ட்

ஷர்ட்

இவர் கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயதுதான் வந்திடுச்சி மீட் பண்ணவா என்ற பாடலுக்கு செமையாக எக்ஸ்பிரஷன் கொடுத்து பட்டையை கிளப்பியுள்ளார். அதில் செல்போனில் நயன்தாராவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவரது ஷர்ட்டில் இருந்து எடுக்கிறார்.

சீனா பையன்

சீனா பையன்

இந்த பாடலுக்கு இவர் பாடுவது போல் வாயசைப்பை கனகச்சிதமாக கொடுத்துள்ளார். அது போல் நடுநடுவே நயன்தாரா இவரை ஆச்சரியமாக பார்ப்பது போன்ற ரியாக்ஷன்களையும் கொலாஜ் செய்துள்ளார். இவரை ட்விட்டரில் பாராட்டியவர்களுக்கு நன்றி நண்பா என டங்கிலீஷில் டைப் செய்துள்ளார் சீனா பையன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+