வேலைக்கு ஆகாத சீனாவின் பிடிவாதம்! அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய அட்ஜெஸ்ட்மென்ட்
பெய்ஜிங்: அமெரிக்காவின் வரிக்கு சீனாவும் பதிலடி வரியை விதித்திருந்தது. ஆனால் சில முக்கிய பொருட்களுக்கு வரி இடையூறாக இருப்பதால் இந்த வரியை நீக்க சீனா முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் சில முக்கிய பொருட்கள் அமெரிக்காவுக்குள் வரி இல்லாமல் நுழையும். இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் என்று சொல்லப்படுகிறது.

இதற்காக சீனா வைத்துள்ள திட்டம்தான் 'Whitelisting'. இதன் மூலம் சில அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், செமிகண்டக்டர் மற்றும் இன்டகிரிட்டட் சர்க்யூட்(ஐசி) ஆகிய பொருட்களுக்கு நிச்சயம் வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
என்ன ஆனாலும் வரி விஷயத்தில் பின்வாங்க மாட்டோம் என் சீனா சொல்லியிருந்த நிலையில், தற்போது சீன பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
இதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை பார்ப்போம். 5ஜி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஆட்டோமேஷன், தானியங்கி வாகனங்கள் ஆகிய உற்பத்தி துறையில் சீனா முன்னணியில் இருக்கிறது. தொடர்ந்து முன்னேற இந்த தொழில்கள் செழிப்பாக நடப்பது முக்கியம். அப்படியிருக்கையில் செமிகண்டக்டர் மற்றும் இன்டகிரிட்டட் சர்க்யூட் இந்த பொருட்களின் மீது வரியை போடுவது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்காது என்பதால் சீனா இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு சீனா $460 பில்லியன் அளவுக்கு இந்த பொருட்களை இறக்குதி செய்திருக்கிறது. இது எரிவாயு மற்றும் எண்ணெய் இறக்குமதியை விட கூடுதலாகும். அமெரிக்கா, ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகியவற்றுடன் போட்டியிட வேண்டும் என்றால் இது முக்கியம். எனவே சொந்தமாக ஐசி தேவை. அதனால் தான் SMIC, Hua Hong, YMTC போன்ற உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு நிதி அளித்து வருகிறது. இருப்பினும் இத அமெரிக்காவின் Intel, NVIDIA, Qualcomm ஆகிய சிப்களுக்கு நிகரானதாக வர கொஞ்சம் காலம் எடுக்கும்.
எனவேதான் சீனா, அமெரிக்காவின் தொழில்நுட்ப பொருட்களுக்கு விலக்கு அளித்திருக்கிறது. மட்டுமல்லாது வரி போர் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், சீனா முதல் முறையாக இறங்கி வந்திருப்பது அமெரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அமெரிக்காவும் சில பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications