For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிர கண்காணிப்பு.. இந்திய எல்லையில் குவிக்கப்படும் சக்தி வாய்ந்த பிஎல்ஏ படை.. சீனா தந்த விளக்கம்!

இந்தியா - சீனா எல்லையில் சீனா தனது பிஎல்ஏ படைகளை குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியா - சீனா எல்லையில் சீனா தனது பிஎல்ஏ படைகளை குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தற்போது சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    எல்லைக்கு பறந்து சென்ற இந்திய விமானங்கள்... லடாக் எல்லையில் என்ன நடக்கிறது?

    இந்தியா மற்றும் சீனா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. சீனாவில் இருக்கும் நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. அமெரிக்காவின் உதவியுடன் சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களை, இந்தியா நமது நாட்டிற்கு கொண்டு வர முயல்கிறது.

    இதை தொடர்ந்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லையில் உரசல் ஏற்பட தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் இரண்டு நாட்டிற்குள் இடையில் உரசல் ஏற்பட தொடங்கி உள்ளது.

    கொரோனா வைரஸ், எச்.ஐ.வி. மாதிரிதான்.. அழிக்கவே முடியாமல் போகலாம்.. WHO எச்சரிக்கைகொரோனா வைரஸ், எச்.ஐ.வி. மாதிரிதான்.. அழிக்கவே முடியாமல் போகலாம்.. WHO எச்சரிக்கை

    என்ன உரசல்

    என்ன உரசல்

    சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே சண்டை வந்தது. சிக்கிம் பகுதியில் இருக்கும் நகு லா பகுதியில் இந்த சண்டை வந்துள்ளது. கடந்த 10ம் தேதி இந்த சண்டை இரண்டு நாட்டிற்குள் இடையில் வந்தது. அதேபோல் கடந்த 5ம் தேதி இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் ஹெலிகாப்டர்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறி உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படை மூலம் விரட்டி அடிக்கப்பட்டது.

    படைகள் குவிப்பு

    படைகள் குவிப்பு

    இந்த இரண்டு சம்பவங்கள் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்தியா - சீனா எல்லையில் சீனா தனது பிஎல்ஏ படைகளை குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பிஎல்எஸ் (People's Liberation Army - PLA) என்பது சீனாவின் மிகவும் சக்தி வாய்ந்த போர் படை ஆகும். இந்த படைகளை லடாக் மற்றும் சிக்கிம் எல்லையில் சீனா குவித்து வருகிறது. முன்பை விட அதிக வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    சீனா விளக்கம்

    சீனா விளக்கம்

    இது பல கேள்விகளை, சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக தற்போது சீன அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனா தனது விளக்கத்தில், இந்த பிரச்னையை ராஜாங்க ரீதியாக பேசி தீர்க்க வேண்டும். வீரர்களும் தங்களுக்குள் இதை பேசி தீர்க்க வேண்டும். எல்லையில் படைகள் குவிக்கப்பட்டது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    சாதாரண பாதுகாப்பு

    சாதாரண பாதுகாப்பு

    எப்போதும் போலத்தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரோந்து பணிகளை மட்டுமே சாதாரணமாக செய்து வருகிறார்கள். வேறு திட்டங்கள் இல்லை. எல்லை பிரச்சனையில் எங்கள் நிலைப்பாடு மாறவில்லை. ஒரே மாதிரிதான் இருக்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதையே நாங்கள் விரும்புகிறோம். இந்தியா எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எல்லை பிரச்னையை தீர்க்க வேண்டும், என்று சீனா கூறியுள்ளது.

    இந்தியா பதில்

    இந்தியா பதில்

    ஆனால் சீனா வெறும் ரோந்து பணிகளை மட்டும் செய்யவில்லை. இதற்கு பின் பெரிய விஷயங்கள் இருக்கலாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதனால் இந்திய எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிக அளவில் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பிரச்சனை பெரிதாக கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    China responses about the tension in the border with India for past few days .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X