அட.. முப்படைகளோடு சேர்த்து "குரங்குகள் படையை"யும் உருவாக்கியது சீனா!
பெய்ஜிங்: தரைப்படை, கப்பல்படை, விமானப் படையை பார்த்திருப்பீங்க.. கேள்விப்பட்டிருப்பீங்க.. "குரங்குகள்படை"யை கேள்விப்பட்டிருக்கீங்களா? ராமாயண காலத்தில் வானரப் படைகள் இருந்ததாக சொல்லப்படுவதை நிஜமாக்கியிருக்கிறது சீனா.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங் அருகே விமானப் படையின் தளம் அமைந்துள்ளது. இந்த விமானப் படைதளத்துக்கு எதிரிநாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலைவிட பறவைகளால் ஏற்படும் மிரட்டல்தான் அதிகம்.
உலக நாடுகளையெல்லாம் முப்படை கொண்டு எதிர்க்கும் சீனாவின் பாச்சா சின்னஞ்சிறு பறவைகளிடத்தில் பலிக்கவே இல்லை. விமானம் தரை இறங்கும் போது, பறக்கும் போதும் பறவைகளோடு போராடுவதுதான் ஒரேவேலையாக இருந்தது.

குரங்குகள் படை
வெடிகள் வெடித்தும், துப்பாக்கியால் சுட்டுப் பார்த்தும் பறவைகளின் தொந்தரவு அடங்குவதாக இல்லை. பிற நாடுகளை எதிர்கொள்ள எப்படியெல்லாமோ வியூகம் வகுத்து சீண்டிக் கொண்டிருக்கும் சீனாவுக்கு புதிய தலைவலியாகிப் போனது இந்த பறவைகள். இதனால் பறவைகளை எதிர்கொள்ள சீனா வகுத்த வியூகம்தான் குரங்குகள் படை

முதலில் சீன வீரர்களுக்கு..
குரங்குகளை வைத்து எப்படியெல்லாம் பறவைகளை "ஒடுக்குவது" என்று சீன விமானப்படையினருக்கு முதலில் பயிற்சி கொடுக்கப்பட்டது.

குரங்குகளோடு மல்லுக்கட்டும் சீனர்கள்
இப்போது சீன விமானப்படையினர் குரங்குகளோடுதான் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறப்பு பயிற்சிகள்
இதற்காகவே விமானப்படை தளத்துக்கு குரங்குகள் கொண்டுவரப்பட்டு அவற்றுக்குள் நாள்தோறும் சில சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

பறவைகள்தான் டார்கெட்
இந்த குரங்குகளுக்கு முதல் எதிரி என்று சொல்லப்பட்டிருப்பது விமானப்படை விமானங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சின்னஞ்சிறிய பறவைகள்தான்.

விரட்டி அடிப்பது எப்படி?
அடுத்ததாக விமானம் புறப்படும் போதும் தரை இறங்கும் போதும் இடையூறாக வரும் விமானங்களை எப்படியெல்லாம் விரட்டி அடிப்பது என்பது 2வது பயிற்சி.

கூடுகளை அழிப்பது எப்படி?
3வதாக விமானப்படை தளத்தில் இருக்கும் பறவைகளின் கூடுகளை அழிப்பது எப்படி என்று குரங்குகளுக்கு கற்றுத்தரப்படுகிறது.

ஸ்பெஷல் ட்ரெயினிங்
மேலும் ஒரு மனிதருக்கு ராணுவத்தில் எப்படியெல்லாம் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறதோ அப்படியெல்லாம் குரங்குகளுக்கும் அத்தனை ட்ரெயினிங்கும் தரப்படுகிறது.

குரங்குப்படை
இப்படி ஏகப்பட்ட பயிற்சிகள் குரங்குகளுக்கு பிரத்யேகமாக அளிக்கப்பட்டு சீன விமானப்படையின் துணை பிரிவாக "குரங்குபடை" பராமரிக்கப்பட்டு வருகிறது.
அட ராமா!
படம்: http://kj.81.cn
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications