For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் எங்களோடது – இந்திய மேப்பை “கட்” செய்து காட்டிய சீன டிவி சேனல்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவின் வரைபடத்தை சீனாவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தவறாக வெளியிட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

China’s CCTV channel shows India’s map without J&K and Arunachal

பிரதமர் நரேந்திர மோடியின் சீன சுற்றுப்பயணத்தை பற்றி தொகுத்து வழங்கி கொண்டிருந்த சீனாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவி இந்தியாவின் வரைபடத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்கள் இடம் பெறாமல் ஒளிபரப்பியது பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டின் பகுதிகள் என்று கூறி வருகிறது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மறுத்து வருகிறது.

ஆசியாவின் மிகப்பெரும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் பெரும் சிக்கலாக உள்ள இந்த பிரச்சினையை சிறப்பு பிரநிதிகள் மூலம் தீர்க்க இருநாடுகளும் முயன்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A controversy was kicked up today with China’s state-owned television CCTV showing India’s map without Jammu and Kashmir and Arunachal Pradesh while reporting on Prime Minister Narendra Modi’s visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X