'தொழில்துறை சுனாமி' அமெரிக்காவை தூக்கி சாப்பிடும் சீனா! உற்பத்தி துறை முழுமையாக பாதிக்கும் அபாயம்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: உற்பத்தியை அதிகரிப்பது, குறைந்த விலையில் அதை சந்தைப்படுத்துவது என்கிற சீனாவின் முயற்சி அமெரிக்க பொருளாதாரத்திற்கு கடுமையான சவாலாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

என்னதான் டிரம்ப் 125% வரியை வித்தாலும் கூட, சீன பொருட்கள் அமெரிக்காவில் விற்காமல் இருக்கப்போவதில்லை. வரியை விதிப்பதற்கு பதிலாக உற்பத்தியில் அமெரிக்கா கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

China US trade

சீன பொருட்கள் விலை குறைவாக கிடைப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் உற்பத்தியை எளிமைப்படுத்தியது. ஒரு பொருளை உற்பத்தி செய்ய தேவையான உபகரணங்களை போதிய அளவு இருப்பு வைத்திருப்பது, நவீன டெக்னாலஜியை உற்பத்தியில் 100% அளவுக்கு முழுமையாக பயன்படுத்துவது, திறன் வாய்ந்த தொழிலாளர்களை கொண்டிருப்பது ஆகியவை உற்பத்தியை எளிதாகவும், மலிவானதாகவும் மாற்றியிருக்கிறது. இது தவிர சீன அரசு தனிப்பட்ட முறையில் உற்பத்திக்கு ஆதரவளிக்கிறது.

அதாவது கடந்த 4 ஆண்டுகளில் உற்பத்தி துறையை நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் ரூ.166 லட்சம் கோடி அளவுக்கு சீனா வழங்கியிருக்கிறது. உதாரணமாக அரசு வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுத்திருக்கின்றன. கடன் வாங்கிய நிறுவனங்கள் உரம் தொடங்கி, மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரிகள் வரை தயாரித்து விற்கின்றன. இது பற்றி விவரிக்கும் நிபுணர்கள், சீனா செய்வது தொழில்துறை சுனாமி. அவர்களால் முடியாது எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

சீனாவின் இந்த முயற்சி காரணமாக அமெரிக்கா சுமார் 440 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா இந்த அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. டிரம்ப் ஆடிப்போவதற்கு காரணமே இந்த வர்த்தக பற்றாக்குறைதான். இதனை ஈடுசெய்ய முடியாமல் தற்போது வரியை அறிவித்திருக்கிறார்.

இந்த வரி அமெரிக்க உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் என்று அவர் நம்புகிறார். ஆனால் உண்மை என்னவெனில், உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்காமல் வெறுமென வரியை மட்டும் வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் வரிக்கு எதிராக சீனாவும் உறுதியான சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. 84% வரை அமெரிக்க பொருட்களுக்கு வரியை விதித்திருக்கிறது. அதேபோல, 18 அமெரிக்க நிறுவனங்களை தடை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+