சீனா: அதிகரிக்கும் முதியவர்கள்... விரைவில் ‘நாம் இருவர் நமக்கு இருவர் திட்டம்’ அமல்
ஷாங்காய்: மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக இயற்றப் பட்ட ஒரு குழந்தை திட்டத்திற்கு பதிலாக, இனி தம்பதிகள் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமல் படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கிறது சீனா. எனவே, பெருகி வரும் மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்தும் நோக்கில் ஒரு குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது சீனா.
ஆனால், தற்போது சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வகையில் ஒரு குழந்தை திட்டத்தை வாபஸ் பெற அந்நாடு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டுப்பட்ட மக்கட்தொகை....
சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டுமே பெறும் திட்டம் கடுமையாக்கப் பட்டதன் மூலம், அங்கு ‘மளமள'வென பெருகி வந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

பெண்கள் தட்டுப்பாடு...
ஆனால், ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டும் என்பதால் கருவில் இருக்கும் பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதாகவும், அதனால் திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இளைஞர்கள் குறைவு....
மேலும், சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து விட்டதாம். இதனால், இளைஞர்களின் மனித ஆற்றல் சக்தி குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் வாபஸ்...
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு குழந்தை திட்டத்தை தவிர்க்க சீனா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இத்திட்டம் விரைவில் வாபஸ் பெறப்பட உள்ளது.

புதிய சட்டம்...
விரைவில் நடைபெற உள்ள தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக் குழு கூட்டத்தில் குடும்பத்துக்கு 2 குழந்தை பெற்றுக் கொள்ளும் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம் இருவர் நமக்கு இருவர்....
அதன்படி இனி புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள் 2 குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொண்ட தம்பதிகள் மேலும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவும் இச்சட்டம் அனுமதி அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

லேபர் முகாம்கள்....
அதே போன்று இளம் சிறார் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி ‘லேபர்' முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். குடும்பத்தை பிரியும் இவர்கள் பல ஆண்டுகளாக தனிமையில் வாடுகின்றனர். இது மனித உரிமையை மீறுவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே இச்சட்டமும் நீக்கப்பட்டு லேபர் முகாம்கள் மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications