வெறும் 5 நிமிடத்தில் ரூ.20,000 கோடி சம்பாதித்த அலிபாபா.. சீனா சிங்கம் ஜாக் மா சாதனை!
சீனாவை சேர்ந்த அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெறும் ஐந்து நிமிடத்தில் ரூ.20 ஆயிரம் கோடியை சம்பாதித்து இருக்கிறது.
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெறும் ஐந்து நிமிடத்தில் ரூ.20 ஆயிரம் கோடியை சம்பாதித்து இருக்கிறது.
உலகம் முழுக்க அமேசானும், வால் மார்ட்டும் இணையத்தில் மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களாக இருக்கிறது. இந்தியாவில் அமேசான் மற்றும் பிளிப்கார்டிற்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சீனாவின் நிலைமையே வேறு. அங்கு தனியாளாக ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடம் வகிக்கிறது. மொத்தமாக உலக அளவில் அலிபாபா நிறுவனம் நம்பர் 1 நிறுவனமாகவும் இருக்கிறது.
[கலிபோர்னியாவில் மோசமான காட்டுத் தீயால் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு ]

என்ன நடக்கும்
அலிபாபா நிறுவனத்தை தொடங்கிய ஜாக் மா, எல்லா வருடமும் 11ம் தேதி 11ம் மாதம் மிகப்பெரிய ஆபர்களை அறிவிப்பார். இந்தியாவில் நடக்கும் சீசன் சேல் போல இந்த விற்பனை நடக்கும். இந்த நிலையில் சீனாவில் இன்றும் இந்த விற்பனை நிறைய ஆபர்களுடன், நிறைய தள்ளுபடிகளுடன் நடந்தது.

5 நிமிடத்தில் எவ்வளவு
இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு விற்பனை தொடங்கி ஐந்து நிமிடத்தில் வேகமாக பொருட்கள் விற்று தீர்ந்தது. சீனா முழுக்க பல கோடி மக்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் அலிபாபா நிறுவனம் வெறும் ஐந்து நிமிடத்தில் ரூ.20 ஆயிரம் கோடியை சம்பாதித்து இருக்கிறது.

மொத்தமாக எவ்வளவு
இப்போதும் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. 1 மணி நேரம் வரை விற்பனை அசுரர் வேகத்தில் நடந்து இருக்கிறது. 1 மணி நேர முடிவில் ரூபாய் 70 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்து உள்ளது. இன்று மாலைக்குள் இது நான்கு மடங்கு விற்பனை செய்யப்படும் என்று அலிபாபா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மிகப்பெரிய சாதனை
சென்ற வருடம் இதேநாளில் அலிபாபா நிறுவனம் 1.8 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டியது. இந்த வருடம் அதைவிட பல மடங்கு வருமானம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதில் ஆப்பிள் நிறுவனமும், சியோனி நிறுவனமும் அதிக அளவில் பொருட்களை விற்று இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications