நடுத்தெருவுக்கு வரும் அமெரிக்கா.. டிரம்பின் ஆட்டம் முடியப்போகுது! ஆப்பிரிக்கா மூலம் சீனா வைத்த செக்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து, செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் உலக அளவில் பெரும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அமெரிக்காவை மையப்படுத்திதான் இனி உலகம் இருக்க வேண்டும் என டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், இதற்கு போட்டியாக சீனா எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அமெரிக்காவை மொத்தமாக காலி செய்யும் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா சூப்பரான ஆஃபரை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் இந்த நாடுகளிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்துக்கும் இனி வரி பூஜ்ஜியமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

China

ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆஃபர்

இது ஆப்பிரிக்க நாடுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆஃபர். ஏனெனில், ஆப்பிரிக்க நாடுகள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவை. மிகவும் ஏழ்மை நாடுகளாகவும் இருக்கின்றன. இப்படி இருக்கையில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜீரோ வரி ஆஃபர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு வைக்கும் செக்-ஆக இருக்கிறது.

அமெரிக்கா vs சீனா

ஏனெனில் வழக்கமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமெரிக்காதான் பொருளாதார ரீதியில் வர்த்தக உறவில் நிவாரணத்தை வழங்கும். 'ஆப்பிரிக்க வளர்ச்சி மற்றும் வாய்ப்பு சட்டம்' (AGOA) மூலம், தகுதியுடைய ஆப்பிரிக்க நாடுகள் சுமார் 6,000க்கும் மேற்பட்ட பொருட்களை வரி இல்லாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாம். இந்த சட்டத்தை கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்தது. ஒவ்வொரு 10 ஆண்டுளுக்கும் இந்த சட்டம் நீட்டிக்கப்படும்.

சொதப்பிய டிரம்ப்

ஆனால் டிரம்ப் இந்த சட்டத்தை தற்போது வெறும் ஓர் ஆண்டுக்கு மட்டுமே நீட்டித்து இருக்கிறார். இதுதான் தற்போதைய பிரச்சனை. ஓர் ஆண்டு என்பது தொழிற்சாலைகளை நிறுவவோ, நீண்ட கால ஒப்பந்தங்களை செய்யவோ போதுமான காலம் கிடையாது. எனவே, ஆப்பிரிக்க தொழில் அதிபர்கள் அமெரிக்காவை நம்பி ஏமாந்து இருக்கின்றன. இந்த வாய்ப்பை தற்போது சீனா சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

பூஜ்ஜிய வரி

மொத்த ஆப்பிரிக்க கண்டத்துக்கும் 0 வரியை சீனா அறிவித்திருக்கிறது. இதற்கு பின்னால் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. உலகம் முழுவதும் இப்போது EV வாகனங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இதை உற்பத்தி செய்ய தேவையான கோபால்ட், லித்தியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்கள் ஆப்பிரிக்காவில் அதிகம் கிடைக்கின்றன. எனவே, இந்த வளத்தை சீனா கைப்பற்றவே இப்படியான ஆஃபரை கொடுத்திருக்கிறது. அமெரிக்காவிடம் இந்த வளங்கள் அதிகம் கிடையாது.

நடுத்தெருவுக்கு வரும் அமெரிக்கா

இதை பெற இந்தியாவுக்கோ, ஆப்பிரிக்க நாடுகளுக்கோதான் வர வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பை தற்போது சீனா முழுமையாக அடைத்திருக்கிறது. இந்த மூவ், அமெரிக்காவுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய செக் என்றே சொல்லப்படுகிறது. மட்டுமல்லாத ஆப்பிரிக்கா என்பது வளர்ந்து வரும் நாடு. அது மிகப்பெரிய சந்தை. அந்த சந்தையை கைப்பற்றுவதற்கான போட்டியில் தற்போது அமெரிக்காவை சீனா பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

அமெரிக்காவின் AGOA வரிச்சலுகை என்பது தற்காலிகமானதாக இருப்பதால், ஆப்பிரிக்க நாடுகள் சீனாவை நோக்கிதான் நகரும். இது அமெரிக்க பொருளாதாரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+