வங்கதேச விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன தெரியுமா?
டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக வெடித்திருக்கிறது. பிரதமர் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். முழு கட்டுப்பாட்டையும் ராணுவம் கையில் எடுத்திருக்கிறது. அதேபோல, இந்த வன்முறை குறித்து சீனாவின் கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இந்தியாவில் இருப்பதை போன்றே இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.
இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனா கட்சி, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விரைவில் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது. அதுவரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. இருப்பினும் மாணவர் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது.
இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த வன்முறைக்கு காரணமான பிரதமர் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இன்று போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லமான கணபாபனை சூறையாடியுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பிரதமர் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து தற்போது அந்நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ்-ஜமால் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், ஷேக் ஹசீனா வங்கதேச நாட்டை விட்டு வெளியேறியதை உறுதி செய்த அவர், அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். அதேநேரம் மாணவர்கள், மக்கள் என அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைய துணை நிற்போம் எனவும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வங்கதேச நிலவரம் குறித்து சீனாவின் கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதாவது, "வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது" என்று வங்கதேசத்திற்கான சீன தூதர் யாவ் வென் கூறியிருந்தார். ஆனால் இந்த கருத்து ஹசீனா வங்கதேசத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கதேசம் சமீப காலமாகவே சீனாவுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தது. குறிப்பாக உள்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான முதலீடுகளை ஹசீனா சீனாவிடமிருந்து எதிர்பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications