உள்ளே புகுந்த 18 ஜெட்கள்.. ஏவுகணைகளை திருப்பிய தைவான்.. சீனாவிற்கு ஆட்டம் காட்டும் குட்டி தீவு.. செம

சீனாவின் 18 போர் விமானங்கள் இன்று அதிகாலை தைவான் நாட்டின் எல்லைக்குள் புகுந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவின் 18 போர் விமானங்கள் இன்று அதிகாலை தைவான் நாட்டின் எல்லைக்குள் புகுந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனாவிற்கு அருகே தென் சீன கடல் பகுதியில் இருக்கும் தைவான் நாட்டை சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் தனி நாடு கிடையாது. தைவான் எங்களுக்கு சொந்தம் என்று சீனா கூறி வருகிறது.

ஆனால் இதை தைவான் எப்போதும் ஏற்றுக்கொண்டது இல்லை. சீனாவின் கீழ் நாங்கள் வரவில்லை. நாங்கள் எப்போதும் சுதந்திரமான தனி நாடு என்று தைவான் கூறி வருகிறது.

என்ன மோதல்

என்ன மோதல்

அதிலும் தைவான் அதிபர் டிசாய் இங் வேன் சீனாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். நாங்கள் சுயமரியாதை நிரம்பிய நாட்டு மக்கள். சீனாவின் ஆதிக்கத்தை எப்போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா எங்கள் மண்ணில் சிறிய இடத்தை கூட ஆக்கிரமிக்க நாங்கள் விட மாட்டோம். சீனாவின் ஆதிக்கத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தைவான் கூறி வருகிறது.

தைவான் மோதல்

தைவான் மோதல்

இந்த மோதல்தான் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன்படி தைவான் - சீனா இடையே போருக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. அதிலும் தற்போது நேரடியாக அமெரிக்காவின் உதவியை தைவான் நாட தொடங்கி உள்ளது . தைவானுக்கு போர் மற்றும் பாதுகாப்பு ரீதியான உதவிகளை அமெரிக்கா செய்ய தொடங்கி உள்ளது. இது சீனாவை இன்னும் கோபப்படுத்தி இருக்கிறது .

பாதுகாப்பு முக்கியம்

பாதுகாப்பு முக்கியம்

இந்த நிலையில் தைவானுக்கு இன்று அமெரிக்காவை சேர்ந்த அதிகாரிகள் வந்தனர். பென்டகன் அதிகாரிகள், அதிபர் டிரம்பிற்கு நெருக்கமான அதிகாரிகள் இன்று தைவான் வந்தனர். இதனால் சீனா கடுமையான கோபத்திற்கு உள்ளாகி உள்ளது. இதன் விளைவாக தற்போது தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பி உள்ளது. கடந்த ஒரு வாரமாக சீனா தைவான் எல்லை அருகே போர் விமானங்களை அனுப்பியது.

ஆனால் எல்லை

ஆனால் எல்லை

ஆனால் தைவான் எல்லை அருகே சென்று விமானங்கள் முழுமையாக எல்லையை தாண்டவில்லை. அதிலும் தைவான் ஜலசந்தியை சீனா விமானங்கள் தாண்டவில்லை. இந்த இடத்தை தாண்டினால், சீனாவின் போர் விமானங்கள் மீது தாக்குவோம் என்று தைவான் கூறி இருந்தது. இந்த நிலையில், இன்று காலை தைவான் ஜலசந்தி பகுதியை சீனாவின் போர் விமானங்கள் இன்று கடந்தது.

எத்தனை விமானங்கள்

எத்தனை விமானங்கள்

மொத்தமாக சீனாவின் 18 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் நுழைந்துவிட்டு வெளியே சென்றுள்ளது. இதனால், தற்போது தைவான் எல்லையில் ஏவுகணைகளை குவித்து உள்ளது. சீனாவின் இன்னொரு விமானம் உள்ளே வந்தால் அதை உடனே சுட்டு தள்ளுவோம் என்று தைவான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. போர் விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இதனால் தைவான் எல்லைக்கு கொண்டு வந்துள்ளது.

போர் கப்பல்

போர் கப்பல்

அதேபோல் குட்டி குட்டி ஏவுகணைகள் கொண்ட போர் கப்பல்களை தைவான் எல்லைக்கு கொண்டு வந்துள்ளது. தைவான் ஜலசந்தி அருகே இந்த போர் கப்பல்கள் உலவி வருகிறது. சீனாவின் போர் விமானம் வந்தால் அதை தாக்க இவர்கள் தயாராக இருப்பதாக தைவான் அறிவித்துள்ளது. இங்கிருந்து மிக அருகில்தான் அமெரிக்காவின் போர் கப்பல்கள் ரொனால்ட் ரீகன் மற்றும் நிமிட்ஸ் கப்பல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+