தைவானுக்குள் புகுந்த "நான்சி".. இரவோடு இரவாக சீனா அனுப்பிய "இரட்டை வால் டிராகன்".. பதறிய அமெரிக்கா
பெய்ஜிங்: தைவானுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி சென்றுள்ள நிலையில்.. சீனா தைவானை சுற்றி போர் பயிற்சி செய்து வருகிறது. தைவானுக்கு உள்ளே சீனா 21 போர் விமானங்களை அனுப்பி உள்ளது.
Recommended Video
நான்சி பெலுச்சி தைவான் சென்றது தவறு என்று சீனா வெளிப்படையாக விமர்சனம் வைத்துள்ளது. இதனால் தைவானை சுற்றி தற்போது சீனா கடுமையான போர் பயிற்சிகளை செய்து வருகிறது. கடல் பகுதியில் ஏவுகணைகளை ஏவி பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் நாளையில் இருந்து அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக தைவானின் கடல் பகுதியில் சீனா பயிற்சி செய்ய உள்ளது. தைவான் கடல் பகுதியை நோக்கி சீனாவின் டாங்கிகளும் சென்றுள்ளன.
இதனால் அங்கு முழு போருக்கான ஆயத்தம் நடப்பதாக அச்சம் எழுந்துள்ளது. நான்சி பெலுச்சியின் ஒற்றை பயணம் மிகப்பெரிய பதற்றத்தை தெற்காசியாவில் ஏற்படுத்தி உள்ளது.

21 விமானங்கள்
சீனா தைவான் வான் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்புவது சாதாரண விஷயம் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே தைவான் வான் எல்லைக்குள் பல முறை சீனா விமானத்தை அனுப்பி உள்ளது. தைவான் பற்றி அமெரிக்கா ஒரு வார்த்தை சொன்னால் போதும் மறுநாளே தைவான் வான் எல்லைக்குள் சீனா போர் விமானங்களை அனுப்புவதே வழக்கம். இப்போது நான்சி நேரடியாக தைவான் சென்ற கோபத்தில் சீனா 21 போர் விமானங்களை அனுப்பி உள்ளது.

நான்சி உளவு
இந்த நிலையில்தான் தைவானில் நான்சியின் செயல்பாடுகளையும், தைவான் படைகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்கும் விதமாக சீனா உளவு டிரோன் விமானங்களை அனுப்பி உள்ளது. சீனா சார்பாக "இரட்டை வால் டிராகன்" அழைக்கப்படும் Tengden TB-001 என்ற டிரோன் விமானம் தைவானுக்குள் களமிறக்கப்பட்டு உள்ளது. தைவானுக்கு நான்சி வருகிறார் என்று தெரிந்ததும் சீனா இந்த உளவு விமானத்தை உடனே களமிறக்கியதாக கூறப்படுகிறது. இது 3 என்ஜின், இரண்டு வால் கொண்ட உளவு விமானம் ஆகும்.

குண்டு
பார்க்க சிறியதாக இருந்தாலும் இந்த டிரோன் அதிக எடை கொண்ட குண்டுகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது இது. ஜப்பானை இவ்வளவு நாட்களாக உளவு பார்த்துக்கொண்டு இருந்த இந்த இரட்டை வால் டிராகன் தற்போது நான்சி மற்றும் தைவான் செயல்பாடுகளை கண்காணிக்க தைவான் சென்றுள்ளது. நான்சி பயணத்தால் தைவான் நாடு எங்கே விடுதலைக்கு முயல்கிறதோ, சீனாவிற்கு எதிராக போர் தொடுக்க தைவான் நினைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

உளவு
இதனால் தைவான் படைகளின் மூவ்மெண்டுகளை கண்காணிக்கும் விதமாகவும், நான்சியின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதமாகவும் இந்த டிரோனை சீனா அனுப்பி உள்ளது. தைவானை சுற்றி இருக்கும் அமெரிக்க போர் கப்பல்கள், தைவான் உள்ளே இருக்கும் அமெரிக்காவின் போர் விமானங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் விதமாக இந்த அதி நவீன உளவு விமானம் அனுப்பட்டதாக கூறப்படுகிறது. ரேடாரில் சிக்காமல் 200 கிலோ எடை கொண்ட குண்டுகளை கூட எளிதாக சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும் இந்த டிரோன்.

அமெரிக்கா பதற்றம்
நான்சி பயணத்திற்கு எதிராக சீனாவின் இந்த மூவ் காரணமாக அமெரிக்கா பெரும் பதற்றத்தில் இருக்கிறது. ஏனென்றால் தைவானை உலகின் பெரும்பாலான நாடுகள் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. ஏன் அமெரிக்காவே தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. ஐநாவும் அங்கீகரிக்கவில்லை. அப்படி இருக்கும் போது நான்சியின் பயணம் காரணமாக சீனா - அமெரிக்கா இடையில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நான்சி பயணத்திற்கு எதிராக சீனா இவ்வளவு கோபமாக, வலுவாக ரியாக்சன் கொடுக்கும் என்றும் அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை... இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் கையை பிசையும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது.
-
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications