மாயமான விமானம் குறித்து சீனாவுக்கு செயற்கைக்கோள் படங்கள் கிடைத்ததாக தகவல்!
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மாயமான விமானம் குறித்து சீனாவுக்கு செயற்கைக்கோள் மூலம் சில படங்கள் கிடைத்திருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் என்ன ஆனது என்பது 2 வார காலத்துக்கும் மேலாக மர்மமாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மலேசிய விமானம் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் காணாமல் போன விமானத்தின் பாகமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும்படியான 22 மீட்டர் நீளமான பொருள் ஒன்று சீனாவின் செயற்கைக்கோளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் 120 கி.மீ தொலைவில் இந்த பொருட்கள் மிதந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications