இந்திய வீரர்களின் திறமையை பார்த்து நடுங்கிய சீனா.. "மார்ஷியல் ஆர்ட்ஸ்" வீரர்களை களமிறக்கும் ஜிங்பிங்
பெய்ஜிங்: சீனா தனது ராணுவ வீரர்களுக்கு சிறப்பு சண்டை பயிற்சியை அளிக்கும் வகையில் தற்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் குங்க்பூ பாணியிலான சண்டை பயிற்சியாளர்களை களமிறக்கி உள்ளது.
இந்தியா சீனா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நிமிடத்திற்கு நிமிடம் ;பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அங்கு தொடர் பேச்சுவார்த்தைகள் பெரிதாக பலன் அளிக்கவில்லை.
இதனால் தொடர்ந்து எல்லையில் சீனா - இந்தியா படைகளை குவித்து வருகிறது. இரண்டு நாட்டு தரப்பும் 20க்கும் மேற்பட்ட முறைகள் பேச்சுவார்த்தை செய்துள்ளது. கல்வான் பகுதியில் கடந்த 15-16 தேதிகள் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

பலி எண்ணிக்கை
இந்தியா சீனா இடையே நடந்த இந்த சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. சீன தரப்பு இது தொடர்பாக தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இந்திய தரப்பை விட சீனாவில் இதனால் அதிக அளவில் வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். சீன வீரர்கள் அதிகமாக பலியான காரணத்தால்தான் சீனா இது தொடர்பான விவரங்களை வெளியே சொல்லவில்லை என்று கூறுகிறார்கள்.

திறமை
அதிலும் இந்த எல்லை சண்டையின் போது சீன வீரர்கள் கொடூரமான ஆயுதங்களோடு தயாராக வந்து இருந்தனர். ஆனால் இந்திய வீரர்கள் அப்படி இல்லை, எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் அங்கே வீரர்கள் சண்டைக்கு சென்று இருந்தனர். ஆனால் இந்திய வீரர்கள் மிக வீரத்துடன் எல்லையில் சண்டை போட்டனர். இந்திய வீரர்களின் அதிரடியான சண்டையை சீன வீரர்கள் சமாளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

சிறப்பு பயிற்சி
இந்திய வீரர்களின் சிறப்பான சண்டை பயிற்சிதான் இதற்கு காரணம் என்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சீனா தனது படைகளுக்கு சிறப்பு சண்டை பயிற்சி அளிக்க உள்ளது. மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் குங்க்பூ பாணியிலான சண்டை பயிற்சியை சீனா தனது நாட்டு வீரர்களுக்கு அளிக்க உள்ளது. இதற்காக 20 மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

எல்லையில் வீரர்கள்
இவர்கள் தற்போது திபெத்தில் இந்திய எல்லைக்கு அருகே சீனா வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். எப்படி கை சண்டை மூலம் வீரர்களை மோசமாக தாக்குவது. எப்படி உயிர் பலிகளை ஏற்படுத்துவது என்று இவர்கள் பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். இந்திய வீரர்கள் உடன் மீண்டும் எல்லையில் சண்டை வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்காக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
Recommended Video

இரண்டு நாடுகள் ஒப்பந்தம்
1996ல் இந்தியா - சீனா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இரண்டு நாடுகளும் எல்லையில் துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த கூடாது. எதிரி நாட்டு வீரர்களை தாக்கும் வகையில் இவர்கள் துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த கூடாது. எல்லையில் வீரர்கள் அத்துமீறினால் அவர்கள் உடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இதனால்தான் எல்லையில் ஆயுதங்களை வீரர்கள் பயன்படுத்துவது இல்லை.












Click it and Unblock the Notifications