டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்.. சீனா கொடுத்த தரமான பதிலடி! 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு செக்
பெய்ஜிங்: டிரம்பின் வரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் 18 நிறுவனங்களுக்கு தடை விதித்திருக்கிறது சீனா. இதனால் இந்த நிறுவனங்கள் சீன சந்தையில் 30% வரை இழப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு மற்ற நாடுகள் எல்லாம் பதிலடி தராமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் சீனா இறங்கி செய்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

தடை விதிக்கப்பட்ட 18 நிறுவனங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று ஏற்றுமதி கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள், இரண்டாவது நம்பகத்தன்மையற்ற நிறுவனங்களின் பட்டியல்.
1. Teledyne Brown Engineering
2. Boeing-க்கு சொந்தமான Insitu
3. American Photonics
4. Novotech
5. High Point Aerotechnologies
6. Logistics Holdings
7. Source Intelligence
8. Coalition For A Prosperous America
9. Edge Autonomy Operations
10. Cyberlux Corporation
11. Hudson Technologies
12. Saronic Technologies
இந்த நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல இதனை தொடர்ந்து 6 நிறுவனங்கள் நம்பகத்தன்மையற்ற பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
1. Shield AI
2. Sierra Nevada Corporation
3. Stick Rudder Enterprises
4. Cubic Corporation
5. S3 AeroDefense
6. TCOM
ஆப்டிக்ஸ், லேசர், கிளினிக்கல் ஆராய்ச்சி, விமானியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை வழங்குதல், லாஜிஸ்டிக்ஸ் சேவை என பல துறைகளில் இந்த அமெரிக்க நிறுவனங்கள் கோலோச்சுகின்றன. இவை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய நிறுவனங்களாக இல்லாமல் இருந்தாலும், இதை தடை செய்வதன் மூலம் அமெரிக்காவுக்கு நேரடி வர்த்தக இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக Cyberlux, Saronic Technologies போன்ற நிறுவனங்கள் சீனாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனங்களை தடை செய்வதன் மூலம் மொத்த அமெரிக்கா பொருளாதாரத்தில் 0.1%க்கும் குறைவாகவே பாதிப்பு ஏற்படும். ஆனால், MSMEs துறையில் 7% வரை வர்த்தக பாதிப்புகள் இருக்கும். சீன சந்தையில் வர்த்தக இழப்பு 50% வரை இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவின் பதிலடி அமெரிக்காவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கூட, சொல்லிக்கொள்ளும் அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications