சீனாதான் கிங்! அமெரிக்க சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு வேகம்.. குவாண்டம் கம்ப்யூட்டர் அறிமுகம்
பெய்ஜிங்: அமெரிக்காவின் கூகுள் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு அதிக வேகமான கம்ப்யூட்டரை சீனா கண்டுபிடித்து அசத்தியிருக்கிறது. இதன் மூலம் கூகுள் கணினி செய்யும் வேலையை ஒரு நொடிக்கும் குறைவாக சீன கம்ப்யூட்டர் செய்து முடித்துவிடும்.
சீனாவின் கண்டுபிடிப்பு அறிவியல் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தம் என்று சொல்லப்படுகிறது. எந்த மாதிரியான மாற்றம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை (USTC) சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த சூப்பர் குவாண்டம் கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அவர்கள் 'ஜுச்சோங்ஷி - 3' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கடந்த 2019ம் ஆண்டு கூகுள் நிறுவனம் இதேபோன்ற சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்திருந்தது. இது அசாத்தியமான திறன் கொண்ட கணினியாக இருந்தது. சாதாரண கம்ப்யூட்டர்கள் 10,000 ஆண்டுகளில் செய்யும் வேலையை இந்த கம்ப்யூட்டர் வெறும் 200 விநாடிகளில் செய்து அசத்தியது.
ஆனால், சீனா 2023ம் ஆண்டு ஜுச்சோங்ஷி வகை சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க தொடங்கினார்கள். இது, கூகுளின் சூப்பர் கணினி 200 விநாடிகளில் செய்யும் வேலையை வெறும் 14 விநாடிகளில் செய்து அசத்தியது. அப்போதிலிருந்து கூகுள் நிறுவனத்தின் கணினிக்கும், சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டருக்கும் இடையே பெரிய போட்டி தொடங்கியது. இதன் விளைவாகத்தான் ஜுச்சோங்ஷி - 3 உருவாக்கப்பட்டிருக்கிறது. இது கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு அதிவேகமானதாக இருக்கிறது.
அதாவது கூகுள் கணினி 200 விநாடிகளில் செய்யும் வேலையை 1 நொடிக்குள் முடித்து காட்டியிருக்கிறது. 1 நொடிக்கும் குறைவான நேரத்தை ஆய்வாளர்கள் 'ஃபெம்டோசெக்கண்ட்'(femtoseconds) என்று குறிப்பிடுகிறார்கள்.
இதில் 15×7 105 க்யூபிட்களும், 182 கப்பளர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் செயல் திறனை கீழ் கண்டவாறு விளக்கலாம்.
Single-qubit gate: 99.90%
Two-qubit gate: 99.62%
Readout fidelity: 99.13%
Coherence time: 72 மைக்ரோசெகண்ட்ஸ்
ஏன் இதுபோன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன? இதற்கான தேவை என்ன இருக்கிறது? என்பது குறித்து கேள்விகள் எழலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டி போட்டது. இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் IBM-ன் Quantum Computing முக்கிய பங்கு வகித்தது. இரசாயன அணுக்கள் மற்றும் புரதங்களை (Proteins) குவாண்டம் கணினிகளால் கணக்கீடு செய்து, புதிய மருந்துகளுக்கான வடிவமைப்பு எளிதாக முடியும்.
எய்ட்ஸ், புற்றுநோய், அல்சைமர் போன்ற நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கவும் சூப்பர் கம்ப்யூட்டர் மிக உதவியாக இருக்கும். தவிர மருத்துவ தரவுகள், அரசாங்க தகவல்களை பாதுகாக்கவும், மழை, புயல், வெப்பநிலை மாற்றம் போன்றவற்றை மிகச்சரியாக கணிக்கவும் இவை உதவும். NASA, IBM, Google போன்றவை வானிலை ஆய்வுக்காக குவாண்டம் கணினிகளைப் பயன்படுத்துகின்றன.
மட்டுமல்லாது Cryptocurrency, Bitcoin, Blockchain போன்றவற்றில் பாதுகாப்பை அதிகரிக்கலாம். ஆக இந்த வகை கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய ஆய்வுக்காவே பயன்படுத்தப்படுகின்றன. நம்மை போன்ற சாமானிய மக்களின் கைகளுக்கு இது வர இன்னும் 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications