உறவை தொடங்கலாம்.. பிடனுக்கு மெசேஜ் அனுப்பிய ஜி ஜிங்பிங்.. அமெரிக்கா - சீன உறவில் எதிர்பாராத டிவிஸ்ட்
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடனுக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டு நாட்டு உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்த நிலையில் தற்போது பிடனுக்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ளார். நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய தோல்வியை குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் பெற்றுள்ளார்.
தேர்தலில் வென்ற பிடன் ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இத்தனை நாட்கள் முரண்டு பிடித்து வந்த டிரம்பும் ஆட்சியை விட்டு செல்ல முடிவு எடுத்து.. பிடனுக்கு வழி விட தொடங்கி உள்ளார்.

என்ன நடந்தது
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடனுக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடனுக்கு ஜி ஜிங்பிங் வாழ்த்து மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த மெசேஜில்.. இரண்டு நாட்டு உறவு நிலையானதாக இருக்க வேண்டும். இரண்டு நாடுகளும் வெற்றி பெறும் வகையில் உறவு அமைய வேண்டும்.

இரண்டு
இரண்டு நாட்டு உறவு ஆரோக்கியமாகவும் உறுதியாக இருக்க வேண்டும். இரண்டு நாடுகளின் உறவு நிலையானதாக இருக்க வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் விருப்பம். இரண்டு நாடுகளும் மோதல் மற்றும் கருத்து வேறுபாடு இல்லாத உறவை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியம்
இரண்டு நாடுகளும் மற்ற நாட்டு உணர்வுகளை மதிக்க வேண்டும். இரண்டு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பு மீது கவனம் செலுத்த வேண்டும். வேறுபாடுகளை மறந்து ஆரோக்கியமான, நிலையான உறவை உருவாக்க வேண்டும் என்று பிடனுக்கு அனுப்பிய மெசேஜில் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

மாற்றம்
இரண்டு நாட்டு உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்த நிலையில் தற்போது பிடனுக்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக அதிபர் தேர்தலில் பிடனின் வெற்றிக்கு சீனாவின் வெளியுறவுத்துறை வாழ்த்து தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங்கும் பிடனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார் .

டிரம்ப்
அதிபர் டிரம்ப் ஆட்சியில் சீனா - அமெரிக்கா இடையிலான பாதாளத்திற்கு சென்றது. வர்த்தக மோதல், தென் சீன கடல் எல்லை மோதல், கொரோனா காரணமாக ஏற்பட்ட பிளவு என்று இரண்டு நாட்டு மாபெரும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் பிடனின் ஆட்சியில் இரண்டு நாட்டு உறவு புதுப்பிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications