அமெரிக்கா & ஐரோப்பா ஆதிக்கம் அழிய போகுது.. சீனா செய்த தரமான சம்பவம்.. உலக நாடுகளுக்கு பெரிய ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: பல்வேறு துறைகளிலும் சீனா தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்படித் தான் சீனா இப்போது புதிய துறையில் நுழைந்துள்ளது. இந்தத் துறையில் இதுவரை அமெரிக்காவும் ஐரோப்பாவும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கேம்மை மொத்தமாக மாற்றி போடுவதாகச் சீனாவின் வருகை இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்தக் காலத்தில் சீனா பல்வேறு துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக உற்பத்தித் துறையில் சீனா தான் உலகிற்கே முன்னோடியாக இருக்கிறது. உலகின் உற்பத்தித் தொழிற்சாலை எனச் சொல்லும் அளவுக்குச் சீனா பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது.

China s C919 and ARJ21 Jets Debut Outside Asia Emerging Threat to Boeing and Airbus Dominance

சீன நிறுவனம்

இந்தச் சூழலில் தான் சீனா புதிதாக விமான உற்பத்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட C919 பயணிகள் விமானம், துபாயில் நடந்த உலகின் மிகப் பெரிய விமானக் கண்காட்சிகளில் விமானச் சாகசங்களை நிகழ்த்தியது. இந்த C919ஐ தயாரித்தது சீன அரசுக்குச் சொந்தமான கோமக் எனப்படும் கொமர்சியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா நிறுவனமாகும்.

உலகின் மிகப் பெரிய விமானக் கண்காட்சியான துபாய் ஏர்ஷோவில் இந்த C919ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் முக்கியமான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விமானங்கள் என்பது தயாரிக்க அவ்வளவு ஒன்றும் ஈஸியானது இல்லை. ஒரு விமானத்தில் சிறியது முதல் பெரியது வரை பல லட்சம் பாகங்கள் இருக்கின்றன. அதைத் துல்லியமாக அசெம்பிள் செய்ய வேண்டும்.

ஏன் முக்கியம்

இது மிகவும் சிக்கலான மற்றும் கஷ்டமான வேலை என்பதாலேயே பல நிறுவனங்களால் இதை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை. தற்போதைய சூழலில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ஐரோப்பாவின் ஏர் பஸ் நிறுவனம் மட்டுமே விமானங்களைத் தயாரித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் சீனாவின் கோமக் நிறுவனத்தின் வருகை பேசுபொருள் ஆகியுள்ளது.

இரு விமானங்கள்

துபாய் ஏர்ஷோவின் நிலையான காட்சிப் பகுதியில், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் C919 விமானமும், COMAC C909 பிசினஸ் ஜெட்டும் ஒன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் C919 விமானம் மூன்று வகுப்பு இருக்கை அமைப்பில் 164 இடங்களைக் கொண்டுள்ளது. இது 158 முதல் 192 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. ஒரே முறை எரிபொருள் நிரப்பினால் 5,555 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இதுவரை 26 C919 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மறுபுறம் C909 பிசினஸ் ஜெட் என்பது சிறிய அதேநேரம் ஆடம்பர வசதிகளைக் கொண்ட விமானமாகும். இது 78 முதல் 97 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இதில் எரிபொருள் நிரப்பினால் ஒரே முறையில் 3,700 கிலோமீட்டர் செல்லும். இதுவரை 150+ C909 பிசினஸ் ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?

இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றாலும் கூட விமானம் என்பது பலரது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். இதனால் உடனடியாக எந்தவொரு முக்கிய விமான நிறுவனமும் கோமக்கிற்கு ஆர்டர் கொடுக்காது. அவர்கள் குறைந்தபட்சம் சில ஆண்டுகள் சீனாவில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைச் சர்வதேச நிறுவனங்கள் கவனிக்கும். அதன் பிறகே ஆர்டர்களை கொடுக்கும். இருந்த போதிலும், கோமக் நிறுவனத்திற்கு இது முக்கியமான படியாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+