புகுந்து விளையாடிய இந்தியா! வேலைக்கு ஆகாத சீனாவின் குறுக்கு புத்தி.. பாக். உடன் நிற்பதாக அறிவிப்பு
பெய்ஜிங்: இந்தியாவுடன் பாகிஸ்தனை மோதவிட்டு, ஆசியாவில் தான் பெரிய தலைக்கட்டாக வளர வேண்டும் என்று சீனா திட்டமிட்டிருந்தது. ஆனால் சீனாவின் கனவு தகர்ந்திருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் நிற்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தானுடன் நிற்பதற்கு சீனாவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ஆசியாவில் இந்தியாவின் வளர்ச்சியை குறைத்துக்காட்ட முயற்சிப்பது.

சர்வதேச அளவில் இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருக்கிறது. ஆசியாவில் சீனாவுக்கு வலுவான போட்டியாளராக இந்தியா மாறியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை ஒரு வட்டத்திற்குள் அடைக்க சீனா விரும்புகிறது. ஆனால் அமெரிக்க ஆதரவு இருப்பதால் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. எனவே இந்த வளர்ச்சியை குறைக்க தீவிரவாத தாக்குதல்களால்தான் முடியும். இதை பாகிஸ்தான் செய்கிறது. பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவாக நிற்கிறது.
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்கில் பேசி இந்தியாவை அவமானப்படுத்த சீனா நினைக்கிறது. எனவேதான் பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. காஷ்மீர் என்று வந்துவிட்டால் பாகிஸ்தான் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கும். இதை வைத்து ஒரண்டை இழுத்து, இந்தியா ஏதாவது தவறு செய்தால் அதை வைத்து கட்டம் கட்ட சீனா காத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்க இதுவும் முக்கியமான காரணம்.
இரண்டாவது காரணம் பாகிஸ்தானில் சீனா அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் பாகிஸ்தான் முக்கிய கூட்டாளி. அந்நாட்டில் துறைமுகங்கள், சாலைகள் மற்றும் ஆற்றல் திட்டங்களுக்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலரை சீனா வாரி இறைத்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என்று சீனா நம்புகிறது.
அதேபோல பாகிஸ்தானின் ஆயுத கூட்டாளியாகவும் சீனா இருக்கிறது. ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு அதிக அளவில் விற்கிறது. மட்டுமல்லாது அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டை சமநிலைப்படுத்தவும் பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது. எனவே ஐநா மன்றத்தில் காஷ்மீர் பிரச்சனைக்கு பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு கொடுக்கிறது. பண பயன்பாட்டு கண்காணிப்பு அமைப்பு தலையீட்டின்போது பாகிஸ்தானை பாதுகாக்கிறது.
ஆக, பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கிறோம் என்கிற நிலைப்பாட்டின் பின்னாடி சீனாவின் இவ்வளவு பிளான்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications