எங்கே சென்றாய் எங்கள் "சின்" நிலவே..?
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகையை கடந்த 2 மாதமாக காணவில்லை. அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரை சிறையில் அடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது.
சீனாவின் பிரபலமான நடிகை பேன் பிங்பிங். ஏகப்பட்ட ரசிகர்கள். அதிக சம்பளம் வாங்கும் சீன நடிகையும் இவர்தான். 2014ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான "X-Men: Days of Future Past" படத்தில் நடித்துள்ளார் பேன்.
சமூக வலைதளங்களில் பிங்பிங் படு ஆக்டிவ். ஆனால் ஜூலை 1ம் தேதி முதல் இவரை திடீரென காணவில்லை. என்ன ஆனார், எங்கே போனார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இவர் குறித்த எந்தத் தகவலும் இல்லை.

வரி ஏய்ப்பு புகார்
இந்த நிலையில் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் கிளம்பியது. இந்த வழக்கில் இவரைக் கைது செய்து சிறையில் வைத்திருக்கலாம் என்று தற்போது சந்தேகம் வலுத்துள்ளது.

சிறையில் இருக்கிறாரா
கடந்த வாரம்தான் சீன அரசின் பத்திரிகை ஒன்றில் பேன் அரசுக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். சட்ட ரீதியான முடிவுகளை அவர் ஏற்பார் என்று கூறி செய்தி வெளியிட்டது. இதனால் பேன் கைது செய்யப்பட்டிருக்கலாம என்ற சந்தேகம் வலுத்தது. பின்னர் அந்த செய்தியை இணையதளத்தில் எடுத்து விட்டனர்.

குவிந்த புகார்கள்
பேன் மீது ஏகப்பட்ட புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு தவிர பெருமளவில் பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் புகார் உள்ளது. இந்தப் புகார்களின் பேரிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சு உள்ளது.

காதலரையும் காணவில்லை
அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. இவர் மட்டுமல்லாமல் இவரது காதலரும், நடிகருமான லீ சென்-னையும் கூட காணவில்லை. அவரும் ஜூலை முதல் வாரத்திலிருந்தே ஆளைக் காணோம்.

கொடி கட்டிப் பறந்தவர்
36 வயதாகும் பேன் கொள்ளை அழகு கொண்டவர். சீனாவில் நிறைய ரசிகர்களை வைத்துள்ளார். அதிக சம்பளம் வாங்கிய நடிகையும் கூட. போர்ப்ஸ் இதழே இவரைப் பற்றி எழுதியுள்ளது. பல கோடி சம்பளம் பெற்று நடித்து வந்தார். விளம்பரங்களிலும் கொடி கட்டிப் பறந்தார். இவர் மாயமான மர்மம் எப்போது விலகும் என்று தெரியவில்லை
எங்கே எங்கள் சின் (சீன) தேவதை என்று அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications